சர்வதேச சமையல் - மெக்சிகன் ஃபஜிடாஸ்:பீடா ஸ்டைலில் உருவாகும் மாமிச உணவு

மெக்சிகோன்னாலே அது சமையலுக்கு பேர் போன நாடு. அந்த நாட்டு ஸ்டைல்ல சிக்கன் Fajitas எப்படி செய்யிறதுனுதான் நாம கத்துக்கப் போறோம்... இன்னைக்கு சர்வதேச சமையல் பகுதியில...
சர்வதேச சமையல் - மெக்சிகன் ஃபஜிடாஸ்:பீடா ஸ்டைலில் உருவாகும் மாமிச உணவு
x
மெக்சிகோ நாட்டு கலாசாரத்துல முக்கிய இடம் பிடிக்கிற இந்த Fajitasக்கு ஒரு வரலாறு இருக்கு. மெக்சிகோ நாட்டு மக்கள் அமெரிக்காவுல இருக்குற டெக்சாஸ் மாகாணத்துல வேலை செய்யும் போது அவங்களுக்கு சம்பளத்தோட சேர்த்து இறைச்சியும் கொடுப்பார்களாம். அந்த இறைச்சிய ஓயாத வேலைக்கு நடுவுல, அவங்க அந்த இறைச்சியை வறுத்து சப்பாத்திக்குள்ள வச்சி சாப்பிடுவாங்களாம். அப்படித்தான் உருவாச்சு இந்த சுவையான ஃபஜிடாஸ்.

ஒரு காலத்துல மாட்டு இறைச்சியை வச்சிதான் Fajitas சமைச்சாங்க. ஆனா, காலம் மாற மாற உலக மக்கள் எல்லாருக்கும் பிடிச்ச சிக்கன் Fajitas, உருவாச்சு. சிக்கன் மட்டுமில்லைங்க... மீன், மட்டன்னு அசைவப் பிரியர்கள் விருப்பத்துக்கு ஏற்ப சமைச்சுக்கலாம். சைவப் பிரியர்களுக்காக வெறும் காய்கறிகளை மட்டுமே பயன்படுத்தியும் Fajitas செய்யப்படுது.

சரி... பேசிக்கிடே இருந்தா நீங்க கடுப்பாயிருவீங்க. இப்ப நாம சிக்கன் Fajitas எப்படி சமைக்கறதுனு பார்க்கலாம். 

இதுக்கு தேவையான முக்கியமான பொருள், எலும்பே இல்லாத மார்புப் பகுதி சிக்கன் துண்டு. சின்னச் சின்ன சதுரத் துண்டங்களா அதை வெட்டி எடுத்துகோங்க. அந்த சிக்கன் துண்டுகள் மேல 1 ஸ்பூன் மிளகு தூள், 1 ஸ்பூன் மிளகாய் தூள்,1 ஸ்பூன் பூண்டு பொடி, 1 ஸ்பூன் வெங்காயப் பொடி, 1 ஸ்பூன் சீரகத்தூள் அப்புறம் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நல்லா கலந்துக்கணும்.

அடுத்து ஒரு கடாயில கொஞ்சம் எண்ணெய் ஊத்தி, சிக்கன இந்த எண்ணெய்ல போட்டு பொரிச்சு எடுத்துகோங்க. அடுத்தபடியா ஒரு பெரிய வெங்காயத்தையும் ரெண்டு குடமிளகாயையும் நீளநீளமா வெட்டி, அதே கடாயில போட்டு வதக்கிகோங்க. அதுகூட சிக்கனுக்கு போட்ட அதே மசாலா பொடிகளையும் சேர்த்து கலந்துக்கோங்க. 

வெங்காயம் நல்லா வதங்கி, கண்ணாடி மாதிரி மாறினதும் பொரிச்சு எடுத்த சிக்கன இதனோட சேர்த்து நல்லா கலந்துக்கோங்க. ஃபஜிடாஸோட மணத்தை இன்னும் கொஞ்சம் தூக்கி கொடுக்க, இதுகூடவே நறுக்கிய கொத்தமல்லி இலையையும் சேர்த்து கலந்துக்கோங்க. 

அடுத்து இந்த மசாலாவை ஸ்டஃப் பண்றதுக்கு TORTILLASனு சொல்லப்படுற ரொட்டியை செய்யணும். அதுக்கு ஒரு பெரிய பாத்திரத்துல ஒண்ணரை கப் மைதா, 1ஸ்பூன் நெய் அல்லது வெண்ணெய், 1 ஸ்பூன் உப்பு சேர்த்து வெது வெதுப்பான தண்ணி ஊத்தி நல்லா கலந்துக்கணும்.

இதை சப்பாத்தி பதத்துக்கு பிசைஞ்சு, சப்பாத்தி மாதிரியே உருட்டி சுட்டு எடுத்துக்கோங்க. இந்த டார்டில்லாஸ் மேல கொஞ்சமா மயோனீஸ்(mayonnaise) தடவி ஏற்கனவே செஞ்சு வச்ச சிக்கன் மசாலாவை வச்சி சாப்பிட்டா... ஆகா... அதுதாங்க மெக்சிகன் ஃபஜிடாஸ்!


Next Story

மேலும் செய்திகள்