ஹஸ்பெண்ட் என்றால் என்ன அர்த்தம்? கணவர் - கால்நடை பராமரிப்பு... என்ன தொடர்பு?

வார்த்தைகளுக்கு பின்னால இருக்குற வரலாறை எல்லாம் தோண்டி எடுக்குற நாம ஒவ்வொரு வீட்டுலயும் அப்பிராணியா வாழுற இந்த ஹஸ்பெண்டுகளை விட்டு வைப்போமா? வாங்க ஹஸ்பென்டுங்கற அந்த வார்த்தையை பிரிச்சி மேயலாம்...
x
கால்நடை வளர்ப்பு... அப்படிங்கறது காலம் காலமா நம்ம மக்கள் கிட்ட ஊறிப் போன தொழில்தான். ஆனா, அதுக்கு இங்கிலீஷ்ல என்ன பேருனு செக் பண்ணிப் பார்த்தவங்க கொஞ்சம் ஜெர்க் ஆகியிருப்பீங்க. அனிமல் ஹஸ்பெண்டரி... இதுதான் கால்நடை வளர்ப்புக்கு ஆங்கில மொழியாக்கம். ஹஸ்பெண்ட்னா புருஷன்னுதானே அர்த்தம்? கால்நடை வளர்ப்பை ஏன் அப்படி சொல்றாங்க? வாங்க தெரிஞ்சிக்கலாம்...
Husband அப்படீங்கற வார்த்தை பழங்காலத்து நார்வே நாட்டு மொழியில இருந்துதான் இங்கிலீஷ்ல புகுந்துச்சாம். அந்த மொழியில husbondi அப்படின்னுதான் இது அழைக்கப்பட்டிருக்கு. இது Hus அப்படீங்கறது House அதாவது வீட்டை குறிக்கும்... bondi அப்படீன்னா வசிப்பவர்... அல்லது பராமரிக்கிறவர்னு அர்த்தம். அதாவது வீடு கட்டி வாழ்ந்தவர்கள் எல்லாரையுமே அந்தக் காலத்துல ஹஸ்பண்ட்னுதான் அழைச்சிருக்காங்க. அதுக்கப்புறம்தான் மெல்ல மெல்ல அது குடும்பத் தலைவரை குறிக்க ஆரம்பிச்சுது. மெல்ல மெல்ல கணவரை குறிக்க ஆரம்பிச்சுது. 
சரி வீடு கட்டி வாழ்ந்தவர் ஹஸ்பெண்ட்... அது எப்படி கால்நடை வளர்ப்புல வந்துச்சுனு கேக்கறீங்களா? வீட்டுல வாழ்றவர் மட்டும் ஹஸ்பெண்ட் இல்லை... அதை பராமரிக்கிறவர்தான் உண்மையான ஹஸ்பெண்ட். ஸோ, அந்த வார்த்தைக்கு பராமரிப்பாளர்னும் ஒரு அர்த்தம் இருக்கு. அந்த வகையில தான் கால்நடைகளை பராமரிக்கிற தொழிலுக்கு அனிமல் ஹஸ்பென்டரினு பேர் வந்துச்சு. இனிமே நான் தான் ஹஸ்பெண்ட் அப்படீன்னு யாரும் மீசையை முறுக்கிட்டு அலையாதீங்க... நீங்க ஜஸ்ட் பராமரிப்பாளர்தான் ப்ரோ. அதை புரிஞ்சு நடந்துக்கங்க!


Next Story

மேலும் செய்திகள்