அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - தினசரி தொற்று 1.58 லட்சமாக உயர்வு

அமெரிக்காவில் கொரோனா தொற்றுதல் சமீப வாரங்களில் அதிகரித்துள்ளதால், அங்கு உள்ள மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை பிரிவுகள் நிரம்பி வழிகின்றன.
அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - தினசரி தொற்று 1.58 லட்சமாக உயர்வு
x
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1.58 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றுதலின் ஏழு நாள் சராசரி அளவு 95,152ஆக அதிகரித்து, 2020 நவம்பரில் ஏற்பட்ட அளவை நெருங்கியுள்ளது. கடந்த ஆண்டை விட தற்போது, மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெறுபவர்களின் விகிதம் கொலரோடா மாகாணத்தில் 41 சதவீதமாகவும், மின்னெசோட்டா மாகாணத்தில் 37 சதவீதமாகவும், மிக்சிகன் மாகாணத்தில் 34 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் ஏராளமான மருத்துவர்கள் தாங்க முடியாத அளவுக்கு பணிச் சுமையிலும், மன அழுத்தத்திலும் உள்ளதாக வாசிங்டன் பல்கலைகழக மருத்துவ ஆய்வு மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் அலி மொக்டாட் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்