பிரேசில் பிரபல பாடகி உயிரிழப்பு - விமான விபத்தில் உயிரிழந்த பரிதாபம்

பிரேசிலை சேர்ந்த பிரபல பாடகி மரிலியா மென்டோன்கா விமான விபத்தில் உயிரிழந்தார்.
பிரேசில் பிரபல பாடகி உயிரிழப்பு - விமான விபத்தில் உயிரிழந்த பரிதாபம்
x
சிறிய ரக விமானத்தில் தனது உதவியாளருடன் பாடகி மரிலியா சென்ற நிலையில், மினாஸ் கிரைஸ் மாகாணத்தில் அந்த விமானம், கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் பாடகி மரிலியா, அவரது உதவியாளர், விமானிகள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த பாடகி மரிலியா, லத்தீன் கிராமிய விருது வென்றவர். இந்நிலையில், பாடகியின் மறைவுக்கு பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனேரோ இரங்கல் தெரிவித்து உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்