தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு- 3 பேர் பலி
வியட்நாமில் பெய்த மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.
வியட்நாமில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனதழை பெய்து வருகிறது. ஹனோய் பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மத்திய மாகாணங்களான ஹா தின் மற்றும் குவாங் பின் ஆகிய இடங்களில், கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலைகள் அடைக்கப்பட்டு பள்ளிகள் மூடப்பட்டன. மேலும், குவாங் பின் நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story