இங்கிலாந்து எம்பிக்கு கத்தி குத்து: படுகாயம் அடைந்த டேவிட் அமேஸ் உயிரிழப்பு

கட்சி நிகழ்சியின் போது கத்தியால் பலமுறை குத்தப்பட்ட இங்கிலாந்து நாட்டு எம்பி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
இங்கிலாந்து எம்பிக்கு கத்தி குத்து: படுகாயம் அடைந்த டேவிட் அமேஸ் உயிரிழப்பு
x
தென்கிழக்கு இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் கட்சி நிர்வாகிகளுடன் டேவிட் அமேஸ் ஆலோசனையில் ஈடுபட்டு இருந்துள்ளார். அப்போது மர்மநபர் ஒருவர் அவரை பலமுறை கத்தியால் குத்தியுள்ளார். மருத்துவக்குழுவினர் மற்றும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. இருந்த போதிலும் டேவிட் அமேஸின் உடல்நிலை மிக மோசமாக இருந்ததால், அவரை ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லாமல் சம்பவ பகுதியில் வைத்தே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முற்பட்டனர். ஆனாலும் அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்தவர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்