சர்வதேச விண்வெளி நிலையத்தில் படப்பிடிப்பு: ரஷ்ய நடிகை, இயக்குனர் பங்கேற்பு

சர்வதேச விண்வெளி நிலையத்தில் எடுக்கப்பட உள்ள திரைபடத்தின் இயக்குனர் மற்றும் நடிகை ஆகிய இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, சென்று சேர்ந்துள்ளனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் படப்பிடிப்பு: ரஷ்ய நடிகை, இயக்குனர் பங்கேற்பு
x
சர்வதேச விண்வெளி நிலையத்தில் திரைபடம் ஒன்றை எடுக்க பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் திட்டமிட்டுள்ள நிலையில்,  ரஷ்யாவைச் சேர்ந்த திரைபடக் குழு அவரை முந்தியுள்ளது. 37 வயதான நடிகை யுலியா பெரெசில்ட் மற்றும் 38 வயதான
திரைபட இயக்குனர் கிம் ஷிப்பென்கோ ஆகிய இருவரும் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தின் மூலம் நேற்று இரவு 9 மணி அளவில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்தனர். 354 கிலோமீட்டர்கள் உயரத்தில் இருந்து பூமியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அடுத்த 12 நாட்களுக்கு,  சவால் என்று பெயரிடப்பட்டுள்ள ரஷ்ய மொழி திரைபடத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளது. அங்கு தங்கியுள்ள ரஷ்ய விண்வெளி வீரர்களும் இதில் நடிக்க உள்ளனர். உடல் நலம் குன்றிய விண்வெளி வீரரை குணப்படுத்த அனுப்படும் மருத்துவர் வேடத்தில் நடிகை யுலியா நடிக்க உள்ளார். விண்வெளியில் எடுக்கப்படும் முதல் திரைபடம் இது தான்.


Next Story

மேலும் செய்திகள்