சீனாவில் நிலவும் கடும் மின் பற்றாக்குறை - பல மணி நேர மின்தடையால் மக்கள் அவதி

சீனாவின் பல்வேறு மாகாணங்களில் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், நிலக்கரி இறக்குமதியை அதிகரிக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் நிலவும் கடும் மின் பற்றாக்குறை - பல மணி நேர மின்தடையால் மக்கள் அவதி
x
சீனாவில் நிலக்கரி இறக்குமதியில் ஏற்பட்ட சரிவு காரணமாக மின் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் 20க்கும் மேற்பட்ட மாகாணங்களில் கடும் மின்வெட்டு நிலவி வருகிறது. மேலும் பல மாகாணங்களில் தொழிற்சாலைகளும் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த சிக்கலை சரி செய்யும் திட்டத்தை சீன வளர்ச்சி மற்றும் சீர்திருத்த துறை வெளியிட்டு உள்ளது. இதில், நிலக்கரி உற்பத்தி மற்றும் இறக்குமதியை விரைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரியை எடுத்துச்செல்ல முன்னுரிமை அளிக்குமாறு ரயில்வே துறைக்கு சீன அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், மின்வெட்டை விரைவில் சரிசெய்ய முடியும் என அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்