ஜப்பானின் புதிய பிரதமர் கிஸிடா - விரைவில் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்

வெகுமக்கள் மத்தியில் செல்வாக்கு மிகவும் குறைந்துவிட்டதால், ஜப்பான் பிரதமர் யோஷிடே சுகா (Yoshihide Suga), பதவி விலகப் போவதாக செப்டம்பர் 3இல் அறிவித்திருந்தார்.
ஜப்பானின் புதிய பிரதமர் கிஸிடா - விரைவில் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்
x
வெகுமக்கள் மத்தியில் செல்வாக்கு மிகவும் குறைந்துவிட்டதால், ஜப்பான் பிரதமர் யோஷிடே சுகா (Yoshihide Suga), பதவி விலகப் போவதாக செப்டம்பர் 3இல் அறிவித்திருந்தார். ஜப்பானின் ஆளும் கட்சியான லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் தான் ஜப்பானின் பிரதமராகவும் பதவி வகிப்பது அங்கு வழக்கம். லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் பதவிக்கு இன்று நடைபெற்ற உள்கட்சி தேர்தலில், ஜப்பானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் பியுமியோ கிஸிடா (Fumio Kishida) வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் யோஷிடே சுகா (Yoshihide Suga) போட்டியவில்லை. இதைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமராக பியுமியோ கிஸிடா (Fumio Kishida) விரைவில் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 28இல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல்களில், லிபரல் ஜனனாயகக் கட்சியை வழி நடத்த உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்