வரலாறு படைத்த 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் - 4 பேருடன் விண்வெளி சுற்றுலா

விண்வெளி வீரர்கள் அல்லாத 4 பேரை விண்ணுக்கு அனுப்பி 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் வரலாறு படைத்துள்ளது. இந்த சாதனை பயணத்தை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
வரலாறு படைத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் - 4 பேருடன் விண்வெளி சுற்றுலா
x
விண்வெளிக்கு செல்லும் நிகழ்வுகள் வாடிக்கையான ஒன்று என்ற காலக்கட்டத்திற்கு அறிவியல் உலகம் நகர்ந்து கொண்டிருக்க, தற்போது விண்வெளிக்கு மனிதர்களை சுற்றுலா அனுப்பி வைத்துள்ளார் எலான் மஸ்க். 38 வயதான அமெரிக்க கோடீஸ்வரர் ஐசக்மேன், 51 வயதான சியான் பிராக்டர், 29 வயதான மருத்துவர் ஹேலே அர்கெனாக்ஸ், 42 வயதான கிறிஸ் செம்ப்ரோஸ்கி, இவர்கள் தான் விண்வெளிக்கு சுற்றுலா சென்ற சாதனையாளர்கள். இவர்களது பயணம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசா கென்னடி மையத்தில் இருந்து இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 5.32 மணிக்கு தொடங்கியது.. 

4 பேருடன் விண்ணில் சீறிப் பாய்ந்த பால்கன் என்.9 ராக்கெட், அடுத்த 10 நிமிடங்களில் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. பூமியில் இருந்து 200 கிலோ மீட்டர் உயரம் சென்றவுடன், மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஐசக்மேன் குழு, எதிர்காலத்தில் நிறைய பேர் இங்கு வருவார்கள் எனக்கூறி உற்சாகமடைந்தனர். 3 மணி நேரத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 575 கிலோ மீட்டர் உயரத்திற்கு சென்றதாகவும், அடுத்த 3 நாட்களுக்கு விண்கலம் பூமியை சுற்றி வரும் என கூறப்பட்டுள்ளது. மணிக்கு 27,300 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் விண்கலம், 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியை முழுவதுமாக சுற்றிவருகிறது.

இந்த விண்வெளி சுற்றுலா மூலம் திரட்டப்படும் 20 கோடி டாலர் தொகை, குழந்தைகளுக்கான புற்றுநோய் தடுப்பு ஆராய்ச்சிக்கு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதுவரை பயிற்சி பெற்ற வீரர்கள் மட்டுமே விண்ணிற்கு படையெடுத்த நிலையில், முதன்முறையாக சாமானியர்களை விண்ணிற்கு அனுப்பி வரலாறு படைத்துவிட்டது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.

Next Story

மேலும் செய்திகள்