ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி - தலிபான், ஹக்கானி நெட்வொர்க் இடையே மோதல்

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை அமைத்திருக்கும் தலிபான், ஹக்கானி நெட்வொர்க் பயங்கரவாத இயக்கங்களுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி - தலிபான், ஹக்கானி நெட்வொர்க் இடையே மோதல்
x
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் அமைத்திருக்கும் இடைக்கால அரசில் அதிபயங்கரவாத இயக்கமான ஹக்கானி நெட்வோர்க் அமைப்பும் இடம்பெற்றுள்ளது.

 அமெரிக்காவால் தேடப்படும் பயங்கரவாதியான, ஹக்கானி நெட்வோர்க் அமைப்பின் தலைவர் சிராஜுதீன் ஹக்கானி உள்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஹக்கானி நெட்வோர்க் அமைப்புக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் கொடுத்திருப்பதை  தலிபான் இயக்கத்தை சேர்ந்த துணை பிரதமர் அப்துல்லா கனி பராதர் விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலிபான் இயக்கத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரான அப்துல்லா கனி பராதர்தான், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு, ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அதில் கையெழுத்திட்டவர்.

அவருக்கும், ஹக்கானி நெட்வோர்க் அமைப்பை சேர்ந்த அகதிகள் விவகாரங்களுக்கான அமைச்சரான கலீல் உர்-ரஹ்மானும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது.

அப்போது அமைதி பேச்சுவார்த்தை மூலம்தான் ஆட்சியை பிடித்தோம் என பராதர் தரப்பும், சண்டையிட்டே நாட்டை கைப்பற்றினோம் என ஹக்கானி நெட்வோர்க் அமைப்பு தரப்பும் வாக்குவாதம் செய்துக்கொண்டதாக தலிபான் உயர்மட்ட தரப்பு தகவல் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே பொதுவெளியில் காணப்படாத அப்துல்லா கனி பராதர் உயிரிழந்துவிட்டார் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. ஆனால், இதனை தலிபான் இயக்கம் அப்துல்லா கனி பராதர் கந்தகாருக்கு பயணம் செய்வதாக பேசும் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே அவர் குறித்த மாறுபட்ட தகவல்களை தலிபான்கள் கூறுவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்