பணக்காரர்கள், கார்ப்பரேட்களுக்கு வருமான வரியை உயர்த்தும் ஜோ பைடன் - 2.9 லட்சம் கோடி டாலர்கள் திரட்ட திட்டம்

பணக்காரர்கள் மற்றும் கார்ப்பரேட்கள் மீதான வரிகளை அதிகரிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
பணக்காரர்கள், கார்ப்பரேட்களுக்கு வருமான வரியை உயர்த்தும் ஜோ பைடன் - 2.9 லட்சம் கோடி டாலர்கள் திரட்ட திட்டம்
x
அமெரிக்கப் பொருளாதாரத்தை மேம்படுத்த, 3.5 லட்சம் கோடி டாலர்கள் அளவுக்கு உள்நாட்டு முதலீட்டு திட்டத்தை ஜோ பைடன் அறிவித்திருந்தார். இதற்கு தேவையான நிதியை திரட்ட, பணக்காரர்கள் மற்றும் கார்ப்பரேட்கள் மீதான வரிகளை அதிகரித்து, 2.9 லட்சம் கோடி டாலர்களை திரட்ட திட்டமிட்டுள்ளார். ஆண்டுக்கு 4 லட்சம் டாலர்கள் வரை ஈட்டுபவர்களுக்கு வருமான வரி உயர்வு எதுவும் இருக்காது என்றும், அதற்கு மேல் ஈட்டுபவர்களுக்கு 39.6 சதவீதமாக உயர்த்தபடும் என்று அறிவித்துள்ளார். ஆண்டிற்கு 50 லட்சம் டாலர்கள் ஈட்டுபவர்கள் மீது கூடுதலாக 3 சதவீத வரி விதிக்கப்பட உள்ளது. கார்ப்பரேட்கள் மீதான வருமான வரி தற்போது உள்ள 21 சதவீதத்தில் இருந்து 26.5 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. 2017இல் முன்னாள் அதிபர் டிரம்ப், கார்ப்பரேட்கள் மற்றும் பணக்கார்கள் மீதான வரிகளை வெகுவாக குறைத்தார். அதற்கு நேர் எதிரான கொள்கைகளை உடைய,  ஜோ பைடன் தலைமையிலான ஜனநாயகக் கட்சியினர், வரிகளை உயர்த்தி, நலத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே அமெரிக்க அரசின் மொத்த கடன் சுமை 28.43 லட்சம் கோடி டாலர்களாக அதிகரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்