கூகுள் மீது அபராதம் விதித்த தென் கொரியா - ரூ.1300 கோடி ரூபாய் அபராதம்

உலகின் மிகப் பெரிய தேடுதல் எந்திர நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் மீது, தென் கொரிய அரசு, 1,300 கோடி ரூபாய் அபராதாம் விதித்துள்ளது.
கூகுள் மீது அபராதம் விதித்த தென் கொரியா - ரூ.1300 கோடி ரூபாய் அபராதம்
x
உலகின் மிகப் பெரிய தேடுதல் எந்திர நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் மீது, தென் கொரிய அரசு, 1,300 கோடி ரூபாய் அபராதாம் விதித்துள்ளது. தென்
கொரியவின் கைபேசி உற்பத்தியாளர்கள், ஆன்ட்ராய்ட் மென்பொருளை சற்று மாற்றியமைத்து, கைபேசிகளில் தரவேற்றினால், கூகுள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோர்ஸில் (App Stores) அவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. கூகுள் நிறுவனம், சந்தையில் தனக்கு உள்ள ஏகபோக, ஆதிக்க சக்தியை தவறாக பயன்படுத்தி, போட்டியாளர்களின் செயலிகளை பயன்படுத்துவதை  இதன் மூலம் நசுக்குவதாக கூறிய தென் கொரிய வர்த்த ஒழுங்குமுறை ஆணையம், அதற்கு தண்டனையாக கூகுள் நிறுவனத்தின் மீது 17.66 கோடி டாலர்கள் அபராதம் விதித்துள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 1,300 கோடி ரூபாய் ஆகும். ஆன்ட்ராய்ட் மென்பொருளை மாற்றி அமைக்காமல், பழைய முறையில் பயன்படுத்துவதன் நன்மைகளை பட்டியலிட்ட கூகுள் நிறுவனம், இந்த அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்