அரசு ஊழியர்களுக்குக் கட்டாய தடுப்பூசி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்குக் கட்டாய தடுப்பூசி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு
அரசு ஊழியர்களுக்குக் கட்டாய தடுப்பூசி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு
x
அரசு ஊழியர்களுக்குக் கட்டாய தடுப்பூசி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்நாட்டில் மூன்றில் 2 பங்கு ஊழியர்களுக்கு கட்டாய கொரோனா தடுப்பூசி எனும் திட்டத்தை செயல்படுத்த உள்ளார். இது குறித்து பேசிய அவர், நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட தொழில் நிறுவனங்கள், தங்கள் தொழிலாளர்களுக்குக் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் அல்லது கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், 75 தினங்களுக்குள் மத்திய ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அவகாசம் வழங்கப்படும் எனவும், முறையான காரணங்கள் இன்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுப்போர் பணி நீக்கம் செய்யப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்