செவ்வாய் கிரகத்தில் கற்பாறை மாதிரி ஒன்றை நாசாவின் பெர்சீவரன்ஸ் ரோவர் கலம் சேகரித்துள்ளது

செவ்வாய் கிரகத்தில், கற்பாறை மாதிரி ஒன்றை முதல் முதலாக நாசாவின் பெர்சீவரன்ஸ் ரோவர் கலம் சேகரித்துள்ளது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்
செவ்வாய் கிரகத்தில் கற்பாறை மாதிரி ஒன்றை நாசாவின் பெர்சீவரன்ஸ் ரோவர் கலம் சேகரித்துள்ளது
x
செவ்வாய் கிரகத்தில், கற்பாறை மாதிரி ஒன்றை முதல் முதலாக நாசாவின் பெர்சீவரன்ஸ் ரோவர் கலம் சேகரித்துள்ளது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்


செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் 2020 ஜூலையில் பெர்சீவரன்ஸ் (Perseverance) என்ற ரோவர் கலத்தை அட்லாஸ் வி ராக்கெட் மூலம் ஏவியது. 2021 பிப்ரவரி 18இல் செவ்வாயில் தரையிறங்கிய இந்த ரோவர் கலத்தின் மூலம், செவ்வாய் கிரகத்தில்,  உயிரினங்கள் வாழ்ந்திருந்தனவா என்பதை ஆராய திட்டமிடப்பட்டுள்ளது. 

ஜூன் ஒன்றாம் தேதியில் பெர்சீவரன்ஸ் ரோவர் தனது ஆராய்ச்சி பணிகளை தொடங்கியது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த கேமிரா மூலம் துல்லியமான புகைபடங்கள் மற்றும் காணொலிகளை பதிவு செய்து, பூமிக்கு அனுப்பியது

பெர்சீவரன்ஸ் ரோவர் கலத்தில் பொருத்தப்பட்டுள்ள 7 அடி நீளமுள்ள ரோபோ கரம் ஒன்றின் முனையில் உள்ள ட்ரில் மூலம் செவ்வாயின் தரை தளத்தை
துளையிட்டு, ஒரு கற்பாறையில் மாதிரியை டைட்டானியம் குழாய் ஒன்றில் சேகரித்துள்ளது. 

பெர்சீவரனஸ் ரோவர் கலம், இந்த முதல் மாதிரியை துல்லியமாக படம் பிடித்து, பூமிக்கு அனுப்பியுள்ளதாக நாசா நிறுவனம் கூறியுள்ளது

அடுத்த சில மாதங்களில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெதுவாக நகர்ந்து சென்று, மொத்தம் 43 மாதிரிகளை இதே முறையில் சேகரிக்க உள்ளது. செவ்வாய் கிரகத்தில் உள்ள வாயுக்கள் ஒரு குழாயில் சேகரிப்பட உள்ளன. தரை தளத்தில் உள்ள மணல், ஒரு குழாயில் சேகரிக்கப்படும்.

சேகரிக்கப்பட்ட கற்பாறை மாதிரிகள் அனைத்தும் மிகப் பாதுகாப்பாக, வலிமையான டைட்டானியம் குழாய்களில் சேகரிக்கப்பட்டு, பெர்சீவரனஸ் ரோவர் கலத்தில் பாதுகாக்கப்படும். 2030களில் இவற்றை மற்றொரு விண்கலத்தின் மூலம் மீட்டு, பூமிக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இவற்றை ஆராய்ந்து, செவ்வாய் கிரகத்தில் முன்னொரு காலத்தில் நுண்ணுயிர்கள் இருந்தனவா என்பதை உறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்