Exclusive | ஜெர்மனியில் பீட்சா விற்கும் ஆப்கன் அமைச்சர் - தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி

தலிபான் அரசுடன் இந்தியா நட்புறவுடன் இருக்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர் சையது அகமது ஷா சதாத் தெரிவித்துள்ளார்.
x
தலிபான் அரசுடன் இந்தியா நட்புறவுடன் இருக்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர் சையது அகமது ஷா சதாத் தெரிவித்துள்ளார். 
2 ஆண்டுகளுக்கு முன்புவரை துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படை வீரர்கள் புடைசூழ வலம்வந்த ஆப்கானிஸ்தானின் அமைச்சர், இன்று ஜெர்மன் வீதிகளில் சைக்கிளில் பீட்சா டெலிவரி செய்து கொண்டிருக்கிறார். இவர்தான் சையது அகமது ஷா சதாத்.

ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றுவதற்கு முன்புவரை அதிபராக
இருந்த அஷ்ரப் கனியின் அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர்.

இங்கிலாந்தின் பிரபல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொறியியலில் இரண்டு முதுகலைப் பட்டம் பெற்ற இவர், தொலை தொடர்புத்துறையில் 20 ஆண்டுகாலம் பல்வேறு நாடுகளின் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றினார்.

பின்னர் அரசியலில் நுழைந்த இவர், 2018 ஆம் ஆண்டு
ஆப்கன் அதிபர் அஷ்ரப்கனி அமைச்சரவையில் தகவல்
தொழில்நுட்பத்துறை அமைச்சரானார்.

2 ஆண்டுகள் அமைச்சராகப் பணியாற்றிய சையது அகமது ஷா  சதாத், அஷ்ரப் கனியின் ஆட்சி நிர்வாகத்தின் கீழ் தன்னால் நேர்மையாக செயல்பட முடியவில்லை என்று கூறி, 2020 ல் பதவியை துச்சமெனத் தூக்கி எறிந்தார்.

இதையடுத்து, நாட்டை விட்டே வெளியேறிய இவரது வாழ்க்கை, இன்று தலைகீழாக மாறிவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்