தலிபான், சீனா உறவு - அமெரிக்க அதிபர் எச்சரிக்கை
பதிவு : செப்டம்பர் 08, 2021, 07:36 PM
சீனா, தலிபான்களுடன் இணைந்து சில திட்டங்களை செயல்படுத்தலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
சீனா, தலிபான்களுடன் இணைந்து சில திட்டங்களை செயல்படுத்தலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். தலிபான் அமைப்புக்கு, சீனா நிதி உதவி அளிப்பது குறித்து கருத்து தெரிவித்த ஜோ பைடன், தலிபான்களுடன் சீனாவுக்கு சில பிரச்சினைகள் உள்ளதாகவும், அதன் காரணமாக தலிபான்களுடன் சீனா சில ஒப்பந்தங்களை மேற்கொள்ள முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகளும் தலிபான்களுடன் இணைந்து செயல்படும் என கருத்து தெரிவித்த பைடன், தலிபான் விவகாரத்தில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க உள்ளதாக கூறினார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பல இடங்களில் கனிம சுரங்கங்களை அமைக்க சீனாவுக்கு தலிபான்கள் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்திக்கு தேவையான கனிமங்களை ஆப்கானிஸ்தானில் இருந்து சீனா இறக்குமதி செய்யும் என கூறப்படுகிறது.

இதேபோல், சீனாவின் முக்கியப் பகுதிகளை பாகிஸ்தான் துறைமுகங்களுடன் இணைக்கும் பொருளாதார வழித்தட திட்டத்தில் சேர தலிபான்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்திற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

57 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

54 views

பிற செய்திகள்

குறைந்து வரும் உலகளாவிய இணைய சுதந்திரம் - டாப் 10 பட்டியல்

உலக அளவில் அளவில்லா இணைய சுதந்திரம் உள்ள டாப்-10 நாடுகளின் பட்டியலையும், இணைய சுதந்திரத்திற்கு கடும் கட்டுப்பாடு விதிக்கும் டாப் - 10 நாடுகளின் பட்டியலையும் தற்போது பார்க்கலாம்.

9 views

ஜோ பைடன் - பிரதமர் மோடி சந்திப்பு : இரு தரப்பு உறவுகள் பற்றி பேச்சுவார்த்தை

மூன்று நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்க உள்ளார்.

62 views

அமெரிக்காவில் பூஸ்டர் டோசுக்கு அனுமதி - உலக சுகாதார நிறுவனம் அதிருப்தி

அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கும், இணை நோய் உள்ளவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

8 views

லா பால்மா எரிமலை வெடிப்பு - தொடர்ந்து வெளியேறும் நெருப்புக் குழம்பு

ஸ்பெயின் கேனரி தீவுகளில் உள்ள லா பால்மா எரிமலை வெடித்துச் சிதறியதால் நெருப்புக் குழம்பு தொடர்ந்து வெளியேறி வருகிறது.

8 views

ஆப்கானில் குறைந்த ஏற்றுமதி - சுங்க முகவர்கள் கருத்து

ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியில் ஏற்றுமதி குறைந்துள்ளதாக சுங்க முகவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

9 views

விண்வெளி சுற்றுலா சென்று திரும்பிய ஐசக்மேன் - குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ராக்கெட்டில் 3 நாட்கள் விண்வெளி சுற்றுலா சென்று திரும்பிய அமெரிக்காவைச் சேர்ந்த ஜாரெட் ஐசக்மேன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது குடும்பத்தினருடன் தனிமைப் படுத்தப்பட்டார்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.