வனப்பகுதியில் காணாமல் போன 3 வயது சிறுவன் - மூன்று நாட்கள் கழித்து உயிருடன் மீட்பு

ஆஸ்திரேலியாவில் காட்டுப்பகுதியில் காணாமல் போன 3 வயது சிறுவன் மூன்று நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்க்கப்பட்டுள்ளான்.
வனப்பகுதியில் காணாமல் போன 3 வயது சிறுவன் - மூன்று நாட்கள் கழித்து உயிருடன் மீட்பு
x
ஆஸ்த்ரேலியாவின் நியு சவுத் வேல்ஸ் மாகாணத்தில், சிட்னி நகருக்கு 150 கிலோ மீட்டர் வடக்கே உள்ள பண்ணை ஒன்றில் வசித்த தம்பதியினரின் 3 வயது சிறுவன், கடந்த வாரம் வெள்ளியன்று காணாமல் போனான். ஆட்டிஸ குறைபாடு உடைய, வாய் பேச முடியாத இந்தச் சிறுவனை, மூன்று நாட்களாக இரவு பகலாக மீட்பு படையினருடன் இணைந்து அவரின் தந்தை
தேடினார். திங்கள் அன்று ஒரு சிறிய ஓடை அருகே அந்த சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டு, பத்திரமாக மீட்கப்பட்டான். ஓடையில் இருந்த நீரைபருகி, மூன்று நாட்களும் சமாளித்ததாக தெரிய வந்துள்ளது. இரவு நேரத்தில் 5.5 டிகிரி அளவுக்கு குளிர் இருந்த நிலையில், மூன்று இரவுகளும், வனப் பகுதியில் தனியாக சமாளித்து, உயிர் பிழைத்துள்ளான். காலில் சில சிராய்ப்பு காயங்களை தவிர, வேறு பாதிப்புகள் இன்றி, அந்தச் சிறுவன் மீட்கப்பட்டுள்ளது அந்த பகுதிவாசிகளையும், மீட்புக் குழுவினரையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்