உக்ரைன் விமானம் ஈரானுக்கு கடத்தல் ? - கடத்தப்பட்டதாக வெளியான தகவலால் பரபரப்பு

ஆப்கானிஸ்தானில் சிக்கி தவிக்கும் தமது நாட்டு மக்களை மீட்க சென்ற உக்ரைன் நாட்டு விமானம் கடத்தப்பட்டதாக வெளிவந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நடந்தது என்ன ? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
உக்ரைன் விமானம் ஈரானுக்கு கடத்தல் ? - கடத்தப்பட்டதாக வெளியான தகவலால் பரபரப்பு
x
இந்நிலையில், தமது நாட்டு மக்களை மீட்க சென்ற உக்ரைன் விமானம் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஈரானுக்கு கடத்தப்பட்டதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவித்ததாக செய்தி வெளியாகி சர்ச்சைகளை எழுப்பியது...  

ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டினர் மற்றும் வெளிநாட்டு படைகள் வெளியேற ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது... 

ஆனால் நாளுக்கு நாள் தாயகம் விட்டு வெளியேற காபூல் விமான நிலையத்தில் காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால்... இந்த காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என பல நாடுகளும் அமெரிக்காவிடம் வலியுறுத்தி வருகின்றன.... 

இந்நிலையில், காபூலில் இருந்து ஈரானுக்கு விமானம் கடத்தப்பட்டதாக வெளியான தகவல் பூதாகரமாக வெடிக்க... 
அப்படி எந்தவொரு விமானமும் கடத்தப்படவில்லை என ஈரானும், உக்ரைன் அரசும் மறுப்பு தெரிவித்து,  வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளன...                                                                                                                                                                                                                                                                                                                                                            எப்படியாவது ஆப்கானைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என காத்து கொண்டிருக்கும் மக்களுக்கு இது போன்ற வதந்திகள் பேரதிர்ச்சியை தருவதோடு, அவர்களை நம்பிக்கை இழக்க வைத்துவிடுகின்றன... 

Next Story

மேலும் செய்திகள்