இந்தியா வரும் ஆப்கானிஸ்தான் மக்கள் : இ-விசா கட்டாயம் என அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் அந்நாட்டை சேர்ந்தவர்கள் இந்தியாவிற்கு இ-விசா மூலம் மட்டுமே பயணம் செய்ய முடியும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா வரும் ஆப்கானிஸ்தான் மக்கள் : இ-விசா கட்டாயம் என அறிவிப்பு
x
ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக அந்நாட்டை சேர்ந்தவர்கள் இந்தியாவிற்குள் இ-விசா பெறுவதன் மூலமே அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்தியா சார்பில் வழங்கப்பட்ட விசா பெற்றவர்கள் இந்தியாவில் தற்போது இல்லை என்றால் அவர்களது விசாக்கள் உடனடியாக ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்