மிரட்டும் மார்பர்க் வைரஸ் பாதிப்பு.. மேற்கு ஆப்பிரிக்காவில் கண்டுபிடிப்பு - கினியாவில் ஒருவர் உயிரிழப்பு

மனித குலம் கொரோனாவுடன் போராடும் நிலையில், மற்றொரு அதிர்ச்சியளிக்கும் தகவலாக அதிவேகமாக உயிரிழப்பை ஏற்படுத்தும் மார்பர்க் வைரஸ் பாதிப்பு மேற்கு ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.
மிரட்டும் மார்பர்க் வைரஸ் பாதிப்பு.. மேற்கு ஆப்பிரிக்காவில் கண்டுபிடிப்பு - கினியாவில் ஒருவர் உயிரிழப்பு
x
1967 ஆம் ஆண்டு முதல் முறையாக கண்டறியப்பட்ட மார்பர்க் வைரஸ் பரவல்,

தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் 12 முறை தொற்றாக வெடித்துள்ளது.

தற்போது முதல் முறையாக மேற்கு ஆப்பிரிக்காவில் கினியாவில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

வவ்வால்கள், விலங்குகள் மூலமாக மனிதர்களுக்கு மார்பர்க் வைரஸ் பரவுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

மனிதர்களிடம் வேகமாக பரவும் தன்மைக் கொண்ட வைரசை தடுக்க தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குநர் எச்சரித்துள்ளார்.

முந்தைய தொற்று பரவல் காலங்களில் மார்பர்க் வைரஸ் பாதிப்பால் இறப்பவர்கள் விகிதம் 24 முதல் 88 சதவீதம் வரையில் இருந்தது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

இது வைரஸ் உருமாறும் போது கொண்டிருக்கும் வீரியத்தை பொறுத்தது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, வயிற்று வலி, இரத்த வாந்தி, தசை வலி, உடல் துவாரங்கள் வழியாக இரத்த கசிவு போன்றவை அறிகுறியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொற்று மோசமடைய ஒவ்வொரு உறுப்புகளாக செயலிழந்து உயிரிழப்பை ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.

இந்த வைரஸ் பாதிப்பை தடுக்க அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளும் கிடையாது, சிகிச்சையளிக்க வைரஸ் எதிர்ப்பு மருந்துகளும் கிடையாது. 

இருப்பினும், உடலில் நீர்ச்சத்தை மேம்படுத்துதல் மற்றும் அறிகுறிகளுக்கு எதிரான துணை சிகிச்சைகள் வாயிலாக குணப்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்