மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் சீன நகரம் - 1,000 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவு

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பெய்த வரலாறு காணாத மழைப்பொழிவு காரணமாக, பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதுபற்றிய செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.
மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் சீன நகரம் - 1,000 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவு
x
காணும் இடமெல்லாம் வெள்ளம் சூழ்ந்திருக்கும் இந்த இடம்,சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தின் ஷென்சோநகரம்.குழந்தைகளையும், உடைமைகளையும் தூக்கிக் கொண்டு,ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.ஷென்ஷோ நகரில் மட்டும், லட்சக்கணக்கான மக்கள், மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.இங்கு நான்கே நாட்களில் 61 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. இங்கு ஆண்டு முழுவதும் மழை பெய்தாலே, 64 சென்டிமீட்டர் தான் பதிவாகும் எனும்போது, ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவு இது என சீன வானிலை ஆய்வாளர்கள்
அதிர்ச்சியூட்டுகின்றனர்.பருவநிலை மாற்றம் இந்த மழை பாதிப்புக்கான காரணமாக சொல்லப்பட்டாலும், தீவிர நகரமயமாக்கல் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மஞ்சள் நதிக் கரையில் ஷென்ஷோ நகரம் இருப்பதாலும், வெள்ள பாதிப்பு அதிகரித்துள்ளது.இதுவரை, மழை, வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், இந்திய மதிப்பில் சுமார் 1500 கோடி
ரூபாய் வரை சேதம் ஏற்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்