திபெத் சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் - இந்திய எல்லை அருகேயுள்ள நகருக்கு பயணம்

சீன அதிபர் ஷி ஜின்பிங், முதன் முறையாக திபெத் பகுதிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்திய எல்லைக்கு அருகே உள்ள நகரின் வளர்ச்சி பணிகளை அவர் பார்வையிட்டார்.
திபெத் சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் - இந்திய எல்லை அருகேயுள்ள நகருக்கு பயணம்
x
சீன அதிபர் ஷி ஜின்பிங், முதன் முறையாக திபெத் பகுதிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்திய எல்லைக்கு அருகே உள்ள நகரின் வளர்ச்சி பணிகளை அவர் பார்வையிட்டார்.

1951 வரை தனி நாடாக இருந்த திபெத்தை, சீனா ஆக்கிரமித்து, ஒரு மாகாணமாக மாற்றியுள்ளது.

திபெத்தின் புத்த மத குரு மற்றும் அரசியல் தலைவராக அதுவரை இருந்த தலாய் லாமா, இந்தியாவிற்கு தப்பி வந்து இன்று வரை இந்தியாவில் வசிக்கிறார். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

2013இல் சீன அதிபராக பதியேற்ற ஷி ஜின்பிங், முதல் முறையாக திபெத் மாகாணத்திற்கு சென்றுள்ளார். 

தென் மேற்கு திபேத் பகுதியில், இந்தியாவின்  அருணாச்சல பிரதேச எல்லைக்கு அருகே உள்ள நியிங்கிச்சி நகருக்கு தனி விமானம் மூலம் சென்றடைந்த ஷி ஜின்பிங், அங்கு பல்வேறு இடங்களை பார்வையிட்டார்.

இதனையடுத்து திபெத்தின் தலைநகர் லாசாவிற்கு சென்ற ஷி ஜின்பிங், அங்கு பொது மக்களையும், புத்த பிக்குகளையும் சந்தித்து உரையாடினார். அங்கு அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

லாசா அருகே அமைந்துள்ள ஒரு புத்த மடாலயத்திற்கும், லாசா அரண்மனைக்கும் சென்றார். திபெத் மாகாண அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தியா சீனா இடையே எல்லைப் பிரச்சனைகள் தொடரும் நிலையில், திபெத்திற்கு முதன் முறையாக ஷி ஜின்பிங் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்