உலகில் ஆதிக்கம் செலுத்தப்போகும் டெல்டா - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
பதிவு : ஜூலை 22, 2021, 03:02 PM
இன்னும் சில மாதங்களில் டெல்டா வகை கொரோனா அனைத்து நாடுகளிலும் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தப் போவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இன்னும் சில மாதங்களில் டெல்டா வகை கொரோனா அனைத்து நாடுகளிலும் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தப் போவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.  கடந்த 4 வாரங்களில் கொரோனா பாதித்தவர்களில் 75 சதவீதம் பேருக்கு டெல்டா வகை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன் முதலில் உறுதி செய்யப்பட்ட டெல்டா வகை கொரோனா, தற்போது 124 நாடுகளில் பரவியுள்ளது. கடந்த வாரத்தை விடவும் கூடுதலாக 13 நாடுகளில் தொற்றுப்பரவல் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற வகைகளைக் காட்டிலும் டெல்டா வகை அதி விரைவாக தாக்கக் கூடியது என்றும், சில மாதங்களில் பெருமளவு ஆதிக்கம் செலுத்தப் போவதாகவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. பிரிட்டனில் முதலில் உறுதி செய்யப்பட்ட ஆல்ஃபா வகை 180 நாடுகளிலும், தென் ஆப்பிரிக்காவில் உறுதி செய்யப்பட்ட பீட்டா வகை 130 நாடுகளிலும், பிரேசிலில் உறுதி செய்யப்பட்ட காமா வகை 78 நாடுகளிலும் பரவியுள்ளது. கிழக்கு பசிபிக் பகுதிகளில் 30 சதவீதமும், ஐரோப்பிய பகுதிகளில் 21 சதவீதமும் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

16 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

8 views

பிற செய்திகள்

தடுப்பூசி செலுத்தினால் பம்பர் பரிசு - கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்த நாடுகள்

கொரோனா தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்க உலகின் பல நாடுகளும் பல்வேறு பரிசு திட்டங்களை அறிவித்து வருகின்றன.

8 views

பெகாசஸ் உளவு விவகாரம்; வழக்கு - 5ம் தேதி விசாரிக்கும் உச்சநீதிமன்றம்

பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆகஸ்ட் 5ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

8 views

எல்லைக்கு செல்லும் நாடாளுமன்ற நிலைக்குழு - பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குறித்து ஆலோசனை

இந்திய எல்லையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வரும் 16ம் தேதி உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு லடாக்கிற்கு செல்கிறது.

5 views

கிரீஸ் நாட்டில் காட்டுத் தீ - வனத்தில் இருந்து கடல் நோக்கி பரவல் : கடுமையாகப் போராடும் தீயணைப்பு வீரர்கள்

கிரீஸ் நாட்டில் வனப்பகுதியில் பற்றிய காட்டுத் தீ, கடல் பகுதியை நோக்கி பரவியது.

8 views

வீடுகள் நோக்கி விரைந்து பரவும் காட்டுத் தீ - பீதியில் உறைந்த மக்கள்

இத்தாலியின் சிசிலி தீவில், குடியிருப்புப் பகுதியை நோக்கி அதி விரைவாகக் காட்டுத் தீ பரவிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

10 views

வாட்டி வரும் கடும் குளிர் - கவலைக்கிடமான காபி பயிர்கள் : வேதனை தெரிவிக்கும் விவசாயிகள்

பிரேசிலில் நிலவி வரும் கடும் குளிரால் காபி பயிர்கள் கவலைக்கிடமாக உள்ளன.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.