தைவான் மீது உரிமை கோரும் சீனா - தைவானுக்கு ஆதரவு அளிக்கும் ஜப்பான்

தைவானுடனான மோதல்களில், ஜப்பான் தலையிட்டால், பிறகு ஜப்பான் மீது அணு குண்டுகளை வீசுவோம் என்று சீனா மிரட்டியுள்ளது. இதைப் பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
தைவான் மீது உரிமை கோரும் சீனா - தைவானுக்கு ஆதரவு அளிக்கும் ஜப்பான்
x
தைவானுடனான மோதல்களில், ஜப்பான் தலையிட்டால், பிறகு ஜப்பான் மீது அணு குண்டுகளை வீசுவோம் என்று சீனா மிரட்டியுள்ளது. இதைப் பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம். சீனாவின் அருகே உள்ள சிறிய தீவு நாடான தைவான், 1949 வரை சீனாவின் ஒரு அங்கமாக இருந்தது. 1949இல் சீனாவில் கம்யூனிச ஆட்சி ஏற்பட்ட பின், தைவான் தனி நாடாக பிரிந்து, முதலாளித்துவ பாதையில் சென்று, வளர்ந்த நாடாக மாறியது. 1950களில் தைவானை சீனா ஆக்கிரமிக்க முயன்ற போது, அமெரிக்கா தனது கடற்படையை அனுப்பி, அதை தடுத்து நிறுத்தியது. இதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக அமெரிக்க  ராணுவம், தைவானில் நிலை நிறுத்தப்பட்டு, சீனாவின் அச்சுறுத்தல்களில் இருந்து தைவானை 1979 வரை பாதுகாத்தது.தைவான், சீனா, ஜப்பான், அணு குண்டுகள், சீன ராணுவம், போர் கப்பல்கள், அமெரிக்க படைகள்சமீபத்திய வருடங்களில் சீனாவின் ராணுவ பலம் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், தைவானை ஆக்கிரமிக்க போவதாக சீனா மிரட்டி வருகிறது. இதைத் தடுக்க, அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் நாடுகளின் கடற்படைகள் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தைவான் பிரச்சனையில் ஜப்பான் தொடர்ந்து தலையிட்டால், ஜப்பான் மீது அணு குண்டுகள் வீசி, அதை அடிபணியச் செய்வோம் என்று சீன அதிகாரி ஒருவர் பேசும் காணொளி ஒன்று சீன அரசின் அதிகாரபூர்வ தொலைக் காட்சியில் வெளியானது. பின்னர் சீனாவின் சமூக வலைதளம் ஒன்றில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அதை 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.இந்த காணொளிக்கு ஏற்பட்ட எதிர்வினைகள், கண்டனங்களின் விளைவாக, இதை அந்த வலை தளத்தில் இருந்து சீனா அகற்றி விட்டது.  ஆனால் அதற்கு முன்பாக அதை பலரும் பிரதியெடுத்து, 
யு டியுப், டிவிட்டர் தளங்களில் வெளியிட்டுள்ளனர்.ஆனால் தைவான் மீது சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருவது தொடர்கிறது.


Next Story

மேலும் செய்திகள்