28 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச கோப்பை - கோபா அமெரிக்காவை வென்ற அர்ஜெண்டினா

28 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கோப்பையை வென்று அர்ஜெண்டினா அணி அசத்தியுள்ளது. இந்த நேரத்தில் சச்சினை நினைவுகூர்ந்து மெஸ்ஸியை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருவதை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
28 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச கோப்பை - கோபா அமெரிக்காவை வென்ற அர்ஜெண்டினா
x


நனவான மெஸ்ஸியின் நீண்ட நாள் கனவு
முதல் சர்வதேச கோப்பையை ஏந்திய மெஸ்ஸி
2011ல் சச்சின்.. 2021ல் மெஸ்ஸி...


28 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கோப்பையை வென்று அர்ஜெண்டினா அணி அசத்தியுள்ளது. இந்த நேரத்தில் சச்சினை நினைவுகூர்ந்து மெஸ்ஸியை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருவதை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில், தோனி சிக்ஸ் அடித்து வெற்றியை வசமாக்க, ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் ஒரே ஒரு முகத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

வாழ்நாள் சாதனையை எட்டிய மகிழ்ச்சியில் டிரஸ்ஸிங் ரூமில் இருந்து ஓடிவந்தார் சச்சின் தெண்டுல்கர்.. 

அவரை பார்த்த உடன் பலகோடி ரசிகர்கள் ஆனந்த கண்ணீர் சிந்த, தோளில் சுமந்து சச்சினை கொண்டாடினர் இந்திய வீரர்கள்...

28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி உலகக்கோப்பை வென்றது மட்டுமின்றி சச்சின் வென்ற முதல் உலகக்கோப்பை தொடர் என்பதால்,  அந்த நிமிடங்கள் ரசிகர்களுக்கு சிறப்பு வாய்ந்த தருணமானது...

தற்போது இதுபோன்றதொரு தருணத்தை உலக கால்பந்து ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளது கோபா அமெரிக்கா இறுதிப்போட்டி...

உலகின் தலைசிறந்த வீரர்களின் ஒருவரான மெஸ்ஸிக்கு அந்த தருணம் வரை அர்ஜெண்டினாவிற்காக ஒரு சர்வதேச கோப்பையை கூட பெற்று தர முடியாத சோகம் தொடர்ந்து வந்தது. இந்த முறையாவது வேட்கை தீருமா என ஏங்கியிருந்தனர் ரசிகர்கள்...

ஒன்றுக்கு பூஜியம் என்ற கணக்கில் பிரேசில் அணியை அர்ஜெண்டினா வீழ்த்த, நடுவர் விசில் அடித்த நேரத்தில் மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்றபடி மண்டியிட்டு கதறினார் மெஸ்ஸி... 

28 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜெண்டினா முதன்முறையாக சர்வதேச தொடரை வென்று அசத்தியது. மெஸ்ஸிக்கு இதுதான் முதல் சர்வதேச கோப்பை என்பதால், அவரை வானில் பறக்கவிட்டு கொண்டாடினர் அர்ஜெண்டினா வீரர்கள்...

கோப்பையை இழந்தாலும், நண்பர் மெஸ்ஸியை கட்டியணைத்து, முத்தமிட்டு பிரேசில் வீரர் நெய்மர் வாழ்த்து கூறியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.

28 ஆண்டுகளுக்கு பிறகு 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை வென்றதை கொண்டாடிய ரசிகர்கள், தற்போது சச்சின் அடைந்த மகிழ்ச்சியை மெஸ்ஸியும் அடைந்துவிட்டார் என ஒப்பிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்...

தோல்வி, விமர்சனம் என பல தடங்கல்களை கடந்து விடாமல் முயன்றார்.

இறுதியாக 

சாதித்துவிட்டார் லயோனல் மெஸ்ஸி....


Next Story

மேலும் செய்திகள்