முதல் அரேபிய பெண் விண்வெளி வீராங்கனை - நாசா நிறுவனத்தில் பயிற்சி பெற திட்டம்

விண்வெளிக்கு செல்ல உள்ள முதல் அரேபிய பெண் வீராங்கனை பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு....
முதல் அரேபிய பெண் விண்வெளி வீராங்கனை - நாசா நிறுவனத்தில் பயிற்சி பெற திட்டம்
x
விண்வெளிக்கு செல்ல உள்ள முதல் அரேபிய பெண் வீராங்கனை பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு....

ஐக்கிய அரேபிய எமீரகத்தின் முகமத் பின் ரஷீத் விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

நோரா அல் மட்ரூஷி என்ற 28 வயதான பொறியியல் நிபுணர் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

விண்வெளி வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் அரேபிய பெண்மணி இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

முகமத் அல் முல்லா என்ற விண்வெளி வீரரும் பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துபாயில் உள்ள முகமத் பின் ரஷீத் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தற்போது பயிற்சியில் உள்ள நோரா அல் மட்ரூஷி, இந்த ஆண்டு டிசம்பரில் அமெரிக்காவின் நாசா நிறுவனத்தில் பயிற்சி வகுப்பில் சேர உள்ளார். 

விண்வெளி வீராங்கனையாக தான் எடுத்த முயற்சிகளுக்கு தனது குடும்பத்தினரும், ஐக்கிய அரபு அமீரக அரசும் பெரிதும் உறுதுணையாக உள்ளதாக நோரா அல் மட்ரூஷி கூறியுள்ளார். 

கடந்த பிப்ரவரியில் ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பிய விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்று பாதையை சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது.

2024ல் சந்திரனுக்கு ஒரு ரோவர் கலத்தை அனுப்ப ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளது.
 


Next Story

மேலும் செய்திகள்