பெருவில் உருவான லாம்டா ரக வைரஸ்: "கவனத்திற்குரிய வைரஸ்" -உலக சுகாதார நிறுவனம்

லாம்டா ரக கொரோனா ரக வைரஸ், டெல்டா ரகத்தை விட ஆபத்தானது என மலேசிய எச்சரித்துள்ள நிலையில், அதை கவனத்திற்குரிய வைரஸ் என உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது.
பெருவில் உருவான லாம்டா ரக வைரஸ்: கவனத்திற்குரிய வைரஸ் -உலக சுகாதார நிறுவனம்
x
லாம்டா ரக கொரோனா ரக வைரஸ், டெல்டா ரகத்தை விட ஆபத்தானது என மலேசிய எச்சரித்துள்ள நிலையில், அதை கவனத்திற்குரிய வைரஸ் என உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது.

2019இன் இறுதியில் சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் படிப்படியாக உருமாற்றம் அடைந்து, பல்வேறு புதிய ரகங்களாக உருமாறியுள்ளது.

இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா ரக கொரொனா வைரஸ், வெகு வேகமாக பரவும்  தன்மை கொண்டுள்ளதால். 2021இல் கொரோனா பரவலின் இரண்டாவது அலை இந்தியாவில் உக்கிரமாக இருந்தது.

2020 டிசம்பரில் தென் அமெரிக்க நாடான பெருவில் கண்டறியப்பட்ட லாம்டா ரக கொரோனா வைரஸ், தற்போது 30 நாடுகளுக்கு பரவியுள்ளது.

பெருவில் ஏற்பட்ட கொரோனா தொற்றுதல்களில், 81 சதவீதம், லாம்டா வைரஸினால் ஏற்பட்டதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உலக சுகாதார நிறுவனம், ஜூன் 14இல், லாம்டா ரக வைரஸை, கவனத்தில் வைக்க வேண்டிய திரிபு என்று வகைப்படுத்தியுள்ளது. 

டெல்டா வைரஸை கவலை அளிக்கும் ரகமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், லாம்டா ரகத்தை அதற்கு ஒரு படி கீழாக வகைப்படுத்தியுள்ளது.  

இந்நிலையில் லாம்டா வைரஸ், டெல்டா வைரஸை விட ஆபத்தானது என்று மலேசியாவின் சுகாதாரத் துறை அமைச்சரகம் கூறியுள்ளது.

ஆனால் அமெரிக்க அரசின் நோய் தடுப்பு மற்றும் கட்டுபாடு மையம், இதுவரை லாம்டா வைரஸை, கவனத்தில் வைக்க வேண்டிய திரிபு என்று வகைப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

லாம்டா வைரஸை ஆய்வு செய்து வரும் பிரிட்டன் சுகாதார அமைச்சரகம், இது மிக தீவிரமான நோய் தொற்றுதலை ஏற்படுத்துகிறது என்பதற்கும், தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுவதில்லை என்பதற்கும் ஆதாரங்கள் எதுவும் தற்போது இல்லை என்று கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்