விண்வெளி நிலையத்தை உருவாக்கும் வீரர்கள் - விண்வெளி வீரர்களுடன் உரையாடிய ஷி ஜின்பிங்

சீனாவின் புதிய விண்வெளி நிலையத்தின் கட்டுமான பணியில் அந்நாட்டு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விண்வெளி நிலையத்தை உருவாக்கும் வீரர்கள் - விண்வெளி வீரர்களுடன் உரையாடிய ஷி ஜின்பிங்
x
சீனாவின் புதிய விண்வெளி நிலையத்தின் கட்டுமான பணியில் அந்நாட்டு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது பற்றிய தொகுப்பை தற்போது பார்க்கலாம்... 

பூமியில் இருந்து 420 கிலோ மீட்டர் உயரத்தில்,  டியாங்காங் என்ற விண்வெளி நிலையத்தை சீனா உருவாக்கி வருகிறது.

இதன் கட்டுமானப் பணிகளில் ஈடுபட, கடந்த வியாழனன்று மூன்று விண்வெளி வீரர்கள், லாங் மார்ச் 2எப் ராக்கெட் மூலம் டியான்ஹெ பெட்டகத்தை சென்றடைந்தனர்.

டியான்ஹெ பெட்டகத்தில் சீன விண்வெளி வீரர்கள்,  ஷி ஜின்பிங், காணொளி உரையாடல், உணவு

டியன்ஹெ பெட்டகத்தில், எடையற்ற நிலையில் மிதந்தபடி, பெட்டிகளை திறந்து உபகரணங்களையும் கட்டுமானப் பொருட்களையும் தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் மூவரிடமும் காணொளி மூலம் உரையாடிய சீன அதிபர் ஷி ஜின்பிங், அவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து, அவர்களின் நலன்களை விசாரித்தார்.

பதிலுக்கு அவர்கள் மூவரும் வரிசையாக நின்று சல்யூட் செய்தனர். சீன அதிபரின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சி முடிந்த பின், காலையுணவை உண்ட வீரர்கள், பின்னர் தங்களின் பணிகளை தொடர்ந்தனர்.

அடுத்த மூன்று மாதங்களுக்கு டியான்ஹெ பெட்டகத்தில் தங்க உள்ள இவர்கள் மூவரும், ஸ்பேஸ் சூட் எனப்படும் சிறப்பு விண்வெளி கவச உடையை அணிந்து, பெட்டகத்தை விட்டு வெளியேறி, விண்வெளியில் பல மணி நேரங்கள் கட்டுமான பணிகளில் ஈடுபட உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்