பெராரி கார் நிறுவனத்தின் உணவு விடுதி - கலை பொருட்களாக கார் எஞ்சின்கள்...

உலகப் புகழ்பெற்ற பந்தயக்கார் தயாரிப்பு நிறுவனமான பெராரி(Ferrari), அழகிய உணவு விடுதி ஒன்றை உருவாக்கியுள்ளது. இதன் பின்னணி பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பெராரி கார் நிறுவனத்தின் உணவு விடுதி - கலை பொருட்களாக கார் எஞ்சின்கள்...
x
பந்தயக்கார்கள் தயாரிப்பில் 80 ஆண்டுகளாக தொடர்ந்து முன்னிலையில் உள்ள நிறுவனம், இத்தாலியின் பெராரி...வடக்கு இத்தாலியில் உள்ள மரனெல்லோ நகரில் பெராரி நிறுவனத்தின் தலைமையகம்அமைந்துள்ளது. இதற்கு நேர் எதிரில் இயங்கி வந்த ஒரு பழம் பெரும் உணவு விடுதி 2019இல் நஷ்டம் காரணமாக மூடப்பட்டது. பெராரி நிறுவனத்தை 1940இல் தொடங்கி, வளர்த்தெடுத்த என்ஸோ பெராரி, ஒரு காலத்தில் இந்த பழம் பெரும் உணவு விடுதியின் வாடிக்கையாளராக இருந்தார்.மூடப்பட்ட இந்த உணவு விடுதியை வாங்கிய பெராரி நிறுவனம், இதை மிக அழகிய முறையில் புதுப்பித்து, இதற்கு இல் காவலினோ (Cavallino) என்ற பெயரிட்டு, சமீபத்தில் திறப்புவிழா நடத்தியுள்ளது.பல அரிய கலைப் பொருட்கள், பெராரி கார்களின் அபூர்வமான பழைய புகைபடங்கள், பெராரி கார் எஞ்சின்கள் இந்த உணவு விடுதியில் மிக அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இந்த உணவு விடுதியின் தலைவர் மாஸிமோ பொட்டுரா, இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெராரி எஞ்சின் ஒன்றை சுட்டிக் காட்டி, இது மைக்கேல் ஸூமேச்செர் ஓட்டிய பந்தயக்காரின் எஞ்சின் என்று பெருமையுடன் கூறுகிறார். இந்த அழகிய, பழம் பெருமைகளை நினவுவூட்டும் உணவு விடுதியில் என்சோ பெராரியின் நினைவுகள் கொண்டாடப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.பெராரி நிறுவனத்தின் புகழை இந்த அழகிய உணவு விடுதி மேலும் அதிகரிக்க செய்யும் என்று இவர்கள் நம்புகிறார்கள்




Next Story

மேலும் செய்திகள்