இஸ்ரேல் அரசியலில் திடீர் திருப்பம் - 8 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து புதிய அரசு

இஸ்ரேலில் 12 ஆண்டுகாலமாக பிரதமராக இருந்த பெஞ்சமின் நேட்டன்யாஹூ ஒரு வாக்கு வித்தியாசத்தில் பதவியிழந்தார்... நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நடந்தது என்ன? பார்க்கலாம்...
இஸ்ரேல் அரசியலில் திடீர் திருப்பம் - 8 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து புதிய அரசு
x
காசா, பாலஸ்தீன மோதல் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் உலக அரங்கில் அறியப்படும் நாடு இஸ்ரேல்.இங்கு கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து பிரதமராக இருந்து வந்தவர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ... இவர் மீது ஊழல் மற்றும் நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக  எழுந்தது. இஸ்ரேல் அரசியல் அசாதாரண சூழல் காரணமாக கடந்த 2 வருடங்களில் மட்டும் 4 முறை நாடாளுமன்ற தேர்தல் நடந்துள்ளது. 4 முறையும் பிரதமர் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் லிக்குட் கட்சி அதிக இடங்களில் பெற்ற போதிலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறவில்லை.அதேபோல் வேறு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில், 120 எம்.பி.களை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதில் லிக்குட் கட்சி தலைமையிலான கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்றது.  ஆட்சியமைக்க தேவையான 61 இடங்கள் கிடைக்கவில்லை. 
இதனையடுத்து  புதிய அரசு அமைப்பதற்கு பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு விடுக்கப்பட்ட 28 நாள் காலக்கெடுவுக்குள் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனது. இதற்கிடையே வெடித்த காசா பிரச்சினையை கொண்டு நேட்டன்யாஹூ காலம் தாழ்த்துவதாக குற்றம் சாட்டப்பட்டது.
வேறு எந்த கட்சியும் பெரும்பான்மை இல்லாததால்  அங்கு மீண்டும் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் திடீர் திருப்பமாக 8 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய ஒற்றுமை அரசை அமைக்க முடிவு செய்தன. அக்கூட்டணியில் இடம்பெற்று இருக்கும்
யாமினா கட்சியின் தலைவர் நஃப்தாலிப் பென்னட், கூட்டணியின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில், பெஞ்சமின் நேட்டன்யாஹூ கூட்டணிக்கு 59 எம்.பி.க்கள் ஆதரவு கிடைத்த நிலையில்,
தேசிய ஒற்றுமை கூட்டணிக்கு 60 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பெஞ்சமின் நேட்டன்யாஹூ  தனது பதவியை இழந்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்