கடும் வறட்சியால் விவசாய நிலங்கள் பாதிப்பு - வேதனை தெரிவிக்கும் விவசாயிகள்

அமெரிக்காவில் கடும் வறட்சி தாக்கியுள்ளதால், விவசாய நிலங்கள் தண்ணீர் இன்றி வாடி வருகின்றன.
கடும் வறட்சியால் விவசாய நிலங்கள் பாதிப்பு - வேதனை தெரிவிக்கும் விவசாயிகள்
x
அமெரிக்காவில் கடும் வறட்சி தாக்கியுள்ளதால், விவசாய நிலங்கள் தண்ணீர் இன்றி வாடி வருகின்றன. கலிஃபோர்னியா, நெவாடா, ஒரிகான், உடா, அரிசோனா உள்ளிட்ட பல இடங்களில் 72 சதவீத நிலங்கள் தண்ணீர் இன்றி வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அமெரிக்காவின் கால் பகுதி நிலங்கள் கடும் வறட்சியால் தாக்கப்பட்டுள்ளதால் காட்டுத் தீயும் அடிக்கடி ஏற்பட்டு, தீயணைப்புத் துறையினரும் கடும் சவால்களை சந்தித்து வருகின்றனர். மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த கால நிலை மாற்றப் பிரச்சினை, நிலைமையை இன்னும் மோசமாக்கும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்