தென் ஆப்பிரிக்காவில் தொற்று அதிகரிப்பு - மக்கள் கூட்டம் கூட கட்டுப்பாடுகள் விதிப்பு

தென் ஆப்பிரிக்காவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, இரவு ஊரடங்கைத் தொடரவும், தேவையின்றி மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும் அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் தொற்று அதிகரிப்பு - மக்கள் கூட்டம் கூட கட்டுப்பாடுகள் விதிப்பு
x
தென் ஆப்பிரிக்காவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, இரவு ஊரடங்கைத் தொடரவும், தேவையின்றி மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும் அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அத்தியாவசியத் தேவைகள் தவிர்த்து, பிற கடைகளான உணவகங்கள், மதுபானக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவை இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மூடியிருக்க வேண்டும் என தென் ஆப்பிரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் விழாக்கள் உள்ளிட்ட காரணங்களுக்காக மக்கள் கூடுகையில், உள்ளரங்குகள் என்றால் 100 பேர் மட்டுமே கூட வேண்டும் எனவும், வெளி அரங்குகள் என்றால் 250 பேருக்கு மட்டுமே அனுமதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்