ஆறுகளில் வெள்ளப் பெருக்கு: பிரேசிலின் அமேசானஸ் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கன மழை

கன மழை - ஆறுகளில் வெள்ளப் பெருக்கு: பிரேசிலின் அமேசானஸ் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கன மழையால், ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு, அந்த மாகாணம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
ஆறுகளில் வெள்ளப் பெருக்கு: பிரேசிலின் அமேசானஸ் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கன மழை
x
கன மழை - ஆறுகளில் வெள்ளப் பெருக்கு: பிரேசிலின் அமேசானஸ் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கன மழையால், ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு, அந்த மாகாணம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், மக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். 4 லட்சத்துக்கும் அதிகமானோர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளின் டிரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன. 

ஆப்கன் - தாலிபன் நீடிக்கும் பிரச்சினை: ஆப்கானிஸ்தான் அரசாங்கம், தாலிபன் பயங்கரவாதிகளுடன் போர் புரியத் தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி பகிரங்கமாக அறிவித்து உள்ளார். ஆப்கன் அரசுக்கும், தாலிபன் பயங்கரவாதிகளுக்கும் இடையே 20 ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது. இதனிடையே, ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் படைகளை திரும்பப் பெறுவதாக அமெரிக்கா அறிவித்தது. இந்நிலையில், தாலிபன்கள் அமைதி நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டால், போர் ஒன்றே தீர்வாகும் என்று ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்து உள்ளார்.

சீனர்களை படுகொலை செய்த விவகாரம்: சீன மக்களை படுகொலை செய்தது தொடர்பான விவகாரத்தில், மெக்சிகோ அரசு அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு உள்ளது. கடந்த 1911-ஆம் ஆண்டு, மெக்சிகோ புரட்சியின்போது, டொரியான் நகரில் வசித்த 300-க்கும் மேற்பட்ட சீன மக்களை, மெக்சிகோ நாட்டினர் படுகொலை செய்தனர். சீன மக்களின் குடியிருப்புகளையும், கடைகளையும் அப்போது சூறையாடினர். இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு மெக்சிகோ அதிபர் லோபெஸ், சீன தூதரின் முன்னிலையில் மன்னிப்பு கேட்டு உள்ளார். இன வெறுப்பு மற்றும் பாகுபாடை மெக்சிகோ ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.  

இங்கிலாந்தில் பெய்த ஆலங்கட்டி மழை: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஆலங்கட்டி மழை பெய்தது. அங்கு கோடைக்காலம் தொடங்க உள்ள சமயத்தில், வழக்கத்துக்கு மாறாக ஆலங்கட்டி மழை பெய்து உள்ளது. ஆலங்கட்டி மழையால், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார்களின் மீது மணி மணியாய் பனிக்கட்டிகள் விழுந்தன. சாலைகளிலும் சிறிய அளவிலான பனிக்கட்டிகள் கொட்டிக் கிடந்தன.

ரஷ்யாவில் ரம்மியமான சூழல்: ரஷ்யாவில் ரம்மியமான தட்ப வெப்பநிலை நிலவியதால், அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பெரும்பாலும் குளிர்ச்சியான சூழல் நிலவும் ரஷ்யாவில், இதமான வெப்பம் நீடித்தது. இதனால், தலைநகர் மாஸ்கோவில் அமைக்கப்பட்டு இருந்த செயற்கை நீரூற்றுகளில் மக்கள் குளித்து மகிழ்ந்தனர். சாலைகளில் சுற்றித் திரிந்தும், புகைப்படம் எடுத்தும் அவர்கள் உற்சாகம் அடைந்த நிலையில், ரஷ்யாவில் 30 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்ப நிலை நீடிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்