ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ் வீரர்கள் கொட்டும் மழையில் போர் பயிற்சி

சீனாவின் சீண்டலுக்கு மத்தியில் ஜப்பானின் பாதுகாப்பை பலப்படுத்த, அமெரிக்க, பிரெஞ்சு, ஜப்பானிய படைகள் கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டுள்ளன.
ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ்  வீரர்கள் கொட்டும் மழையில் போர் பயிற்சி
x
சீனாவின் சீண்டலுக்கு மத்தியில் ஜப்பானின் பாதுகாப்பை பலப்படுத்த, அமெரிக்க, பிரெஞ்சு, ஜப்பானிய படைகள் கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டுள்ளன.  

தென் சீனக்கடலில் ஆதிக்கம் செலுத்தும் சீனா, கிழக்கு சீனக் கடலில் ஜப்பானின் செங்காகு தீவுக்கு உரிமை கொண்டாடி வருகிறது. 

இந்த தீவை டயோயுடாவ் தீவுகள் என்று அழைக்கும் சீனா, ஜப்பான் அதனை சட்டவிரோதமாக கைப்பற்றியிருக்கிறது எனக் கூறிவருகிறது. அதேசமயம் 1895 முதல் இந்த தீவின் மீது தங்கள் நாடு இறையாண்மையை கொண்டுள்ளதாக ஜப்பான் வாதிடுகிறது. 

இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த தீவு பகுதிகளில் எண்ணெய் வளம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியிருக்கிறது. இதனையடுத்து அத்தீவுக்கூட்டங்களுக்குள் சீன விமானப்படை மற்றும் கடற்படை அத்துமீறுவது அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் ஜப்பானின் கரத்தை வலுப்படுத்தும் வகையில், அதன் தோழமை நாடுகளான அமெரிக்கா, பிரான்ஸ் களமிறங்கியுள்ளது.

தெற்கு ஜப்பான் தீவான கையூஷு தீவில் உள்ள கிரிஷ்மா பயிற்சி தளத்தில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ராணுவ வீரர்கள், கூட்டாக பயிற்சி மேற்கொண்டனர்.

ஜப்பான், அமெரிக்கா பலமுறை கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு இருந்தாலும்,  முதல் முறையாக பயிற்சியில் இணைந்திருக்கிறது பிரான்ஸ் படைகள். 

கொட்டும் மழையிலும் மூன்று நாடுகளின் படை வீரர்கள் கூட்டுப் பயிற்சி நடைபெற்றது.

இந்த கூட்டுப் பயிற்சி தங்களுக்கு மிக முக்கியமானது என்றும் ஜப்பானின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்றும் கூறியிருக்கிறார் பிரான்ஸ் ராணுவ குழுவின் தளபதி ஹென்றி மார்கைலு.

இதுபோக ஆஸ்திரேலிய கடற்படை போர் கப்பல்களும் இந்த பயிற்சியில் பங்குபெற்றுள்ளன.

பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக அமெரிக்கா, பிரான்சுடன் ஒரு வலுவான எதிர் அணியை உருவாக்க  ஜப்பான் திட்டமிட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்