கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம் - தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியோர் நடனமாடி மகிழ்ச்சி

மெக்சிகோவில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசைச் செலுத்திக் கொண்ட முதியோர்கள் பூங்காக்களில் கியூப நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம் - தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியோர் நடனமாடி மகிழ்ச்சி
x
மெக்சிகோவில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசைச் செலுத்திக் கொண்ட முதியோர்கள் பூங்காக்களில் கியூப நடனம் ஆடி மகிழ்ந்தனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், கொரோனா ஊரடங்கின் காரணமாக கிட்டத்தட்ட 1 வருடத்திற்கும் மேலாக தனிமையில் இருந்ததாகவும், தற்போது தடுப்பூசி செலுத்திய பிறகு மீண்டும் நடன வகுப்புகளுக்கு வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினர். மெக்சிகோவில் கடந்த வருட இறுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கிய நிலையில், இது வரை கிட்டத்தட்ட 40 லட்சத்திற்கும் மேலானோருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்