நாசாவில் சாதிக்கும் இந்திய வம்சாவளியினர்

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சாதிக்கும் இந்திய வம்சாவளி விஞ்ஞானி பற்றி விளக்குகிறது இந்த தொகுப்பு...
நாசாவில் சாதிக்கும் இந்திய வம்சாவளியினர்
x
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில்
சாதிக்கும் இந்திய வம்சாவளி விஞ்ஞானி பற்றி விளக்குகிறது இந்த தொகுப்பு...

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான
நாசா செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி சாதனை படைத்திருக்கிறது.

பெர்சவரன்ஸ் விண்கலத்துடன் அனுப்பப்பட்ட சிறிய ரக ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் பறந்து வரலாற்று சாதனையை நிகழ்த்தியது.

1.8 கிலோ கிராம் எடை கொண்ட இந்த சிறிய ரக ரோபோட்டிக் ஹெலிகாப்டரை வடிவமைக்கும் குழுவின் தலைமைப் பொறுப்பை வகித்த பலராம், இந்தியாவை பூர்விகமாக கொண்டவர்.

சென்னை ஐஐடியில் படித்து, அமெரிக்காவில் குடியேறிவிட்ட இவர், கடந்த 35 ஆண்டுகளாக நாசாவின் ஜேபிஎல் ஆய்வகத்தில் ரோபோட்டிக் பிரிவில் பொறியாளராக  பணியாற்றி வருகிறார்.

செவ்வாய்க்கு அனுப்பப்பட்டுள்ள பெர்சவரன்ஸ் விண்கலத்தின் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு இயக்க தலைவர் பொறுப்பை ஏற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த சுவாதி மோகன் வரிசையில் விஞ்ஞானி பலராமும்
இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்