புயல் - ராட்சத அலைகளால் அச்சம் - நாலாபுறமும் கரைபுரண்டு ஓடிய வெள்ளம்

சர்கே புயல் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள கிழக்கு கடற்கரையில் ராட்சத அலைகள் எழுந்தன.
புயல் - ராட்சத அலைகளால் அச்சம் - நாலாபுறமும் கரைபுரண்டு ஓடிய வெள்ளம்
x
சர்கே புயல் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள கிழக்கு கடற்கரையில் ராட்சத அலைகள் எழுந்தன. இதன் காரணமாக வீசிய சூறாவளி காற்று மற்றும் பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நாலாபுறமும் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தால், மக்கள்  செய்வதறியாது பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். 

தென்ஆப்ரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீ அருகே இருந்த பல்கலைக்கழகத்திற்கும் பரவியது. டெவில் மலைப்பகுதியில், வனத்தை ஒட்டிய இடத்தில் கேப்டவுன் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த காட்டுப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ, அருகில் இருந்த பல்கலைக்கழகத்திற்கும் பரவியது. பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகம் கொளுந்துவிட்டு எரிய, அதனை அணைக்க வீரர்கள் கடுமையாக போராடினர். 

எகிப்து நாட்டில் ரயில் தடம் புரண்ட விபத்தில் சுமார் 100 பேர் காயமடைந்தனர். கெய்ரோவிற்கு வடக்கு மாகாணமான கலியோபியாவில் நிகழ்ந்த விபத்தில் 97 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் 50 ஆம்புலன்ஸ்கள் உதவியுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், விபத்தில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அந்நாட்டு அரசு அச்சம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் கெய்ரோ அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்