அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசிக்கு டென்மார்க் தடை விதிப்பு

அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுவதாக கூறி அந்த தடுப்பூசிகளுக்கு டென்மார்க் தடை விதித்துள்ளது.
அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசிக்கு டென்மார்க் தடை விதிப்பு
x
டென்மார்க்கில் பைசர், மாடர்னா தடுப்பூசிகளுடன், ஆகஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனகா இணைந்து தயாரித்த தடுப்பூசியும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வந்தது. தற்போது, அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுவதாக கூறி அந்த தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு டென்மார்க் தடை விதித்துள்ளது. இந்த தடுப்பூசி போடப்படும் 40 ஆயிரம் பேர்களில் ஒருவருக்கு தொடர்ச்சியான இரத்த உறைவு காணப்படுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். ஐரோப்பிய யூனியன் நாடுகள் இந்த தடுப்பூசியை யாருக்கெல்லாம் செலுத்தலாம் என்று வயது வரம்பை நிர்ணயம் செய்து வரும் வேளையில் முதல் நாடாக டென்மார்க் தடையை விதித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்