2019 இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: "இந்தியாவின் உதவியை நாடுவோம்" - இலங்கை அமைச்சர்

இலங்கை 2019 ஈஸ்டர் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: இந்தியாவின் உதவியை நாடுவோம் - இலங்கை அமைச்சர்
x
269 பேர் கொல்லப்பட்ட கொழும்பு தாக்குதல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த 9 பேர் தாக்குதலை நடத்தியுள்ளனர் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய சரத் வீரசேகர, இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் உள்ளூர் மதகுரு நௌபர் மௌலவி என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு அஜ்புல் அக்பார் உடந்தையாக செயல்பட்டுள்ளார் என்றும் கூறினார். மேலும் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவரின் மனைவியான சாரா ஜாஸ்மீன் உயிருடன் இருந்தால் அவரை இண்டர்போல், இந்தியா உதவியுடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரையில் 211 பேர் காவலில் எடுக்கப்பட்டு உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்