இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐநா மனித உரிமை ஆணையத்தில் வெற்றி

இனப்படுகொலை தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐநா மனித உரிமை ஆணையத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐநா மனித உரிமை ஆணையத்தில் வெற்றி
x
இலங்கையில் அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, இலங்கைக்கு எதிராக இனப் படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என, ஐ.நா.,மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கடந்த 2012, 2014ம் ஆண்டு அப்போது அதிபராக இருந்த  மகிந்த ராஜபக்சே ஆட்சியின்போது, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அந்த தீர்மானங்கள், இரண்டு முறை தோல்வி அடைந்தன. இந்த நிலையில் ஜெனிவாவில் நடைபெற்ற கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளை அந்நாடு விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரிட்டன், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட  நாடுகள் தீர்மானம் கொண்டு வந்துள்ளன. 

இந்த தீர்மானத்தில் நடந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணித்தது. இலங்கைக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கியூபா உள்ளிட்ட நாடுகள் வாக்களித்தன. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐநா மனித உரிமை ஆணையத்தில் வெற்றி பெற்றது. இந்த தீர்மானத்தை ஆதரித்து  22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன.  இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்தியா, தமிழ் மக்களின் விருப்பங்கள் மற்றும் நல்லிணக்க நடைமுறைகளை இலங்கை அரசு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்