யானைகள் Vs அவகோடா பழம் - அவகோடாவால் சிக்கலில் ஆப்பிரிக்க யானைகள்

விவசாய நிலத்திற்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் என்ற நிலை மாறி, கென்யாவில் யானைகளின் இருப்பிடத்தில் விவசாய நிலம் அமைக்கப்படுவது சிக்கலை மேலும் அதிகரித்துள்ளது.
யானைகள் Vs அவகோடா பழம் - அவகோடாவால் சிக்கலில் ஆப்பிரிக்க யானைகள்
x
விவசாய நிலத்திற்குள்  புகுந்து யானைகள் அட்டகாசம் என்ற நிலை மாறி, கென்யாவில் யானைகளின் இருப்பிடத்தில் விவசாய நிலம் அமைக்கப்படுவது சிக்கலை மேலும் அதிகரித்துள்ளது.இதுபற்றிய செய்தித் தொகுப்பு...

ஆப்பிரிக்க கண்டத்தின் மிக பெரிய மலையான கிளிமஞ்சாரோ, இன்றும் மலையேறுபவர்களின் லட்சிய கனவுகளுள் ஒன்றாக விளங்குகிறது. 

கென்யாவில் உள்ள இந்த மலை தான், உலகின் உயரமான தனித்த மலையும் கூட.  இந்த மலையடிவாரத்தில் அமைந்துள்ளது அம்போசெலி தேசிய உயிரியல் பூங்கா. 

நூற்றுக்கணக்கான ஆப்பிரிக்க யானைகளின் இருப்பிடமான இங்கு, மான்கள், வரிக்குதிரை, காட்டெருமைகள் மற்றும் சிங்கங்களும் வலம் வருகின்றன. 

இந்நிலையில், பூங்காவை ஒட்டியுள்ள பகுதியில் சுமார் 175 ஏக்கர் நிலப்பரப்பில் அவகோடா பழங்களை பயிரிட ஏற்பாடு நடைபெற்று வருவது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

பல போராட்டங்களுக்கு மத்தியில் ஆப்பிரிக்க யானைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் சூழலில், இது போன்ற செயல்பாடுகள் வருத்தம் அளிப்பதாக தெரிவிக்கின்றனர், வன விலங்கு பாதுகாவலர்கள். 

Next Story

மேலும் செய்திகள்