ஜமால் கசோகி கொலை விவகாரம் - சவுதியின் பட்டத்து இளவரசர்தான் காரணம் என அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கை வெளியீடு

பத்திரிக்கையாளர் ஜமால் கசோகி கொலைக்கு சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தான் காரணம் என்று அமெரிக்க புலனாய்வுத் துறை வெளியிட்ட அறிக்கைக்கு சவுதி அரேபிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜமால் கசோகி கொலை விவகாரம் - சவுதியின் பட்டத்து இளவரசர்தான் காரணம் என அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கை வெளியீடு
x
சவுதி அரேபிய அரசின் மனித உரிமை மீறல்களைக் கடுமையாம விமர்சித்து எழுதிய வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையாளர் ஜமால் கசோகி 2018ம் ஆண்டு அக்டோபரில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தான் காரணம் என்று அமெரிக்க புலானாய்வுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் இது தவறான கணிப்பு என்று சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த அறிக்கை வெளியான பிறகு, கசோகி கொலையுடன் தொடர்புடைய 76 சவுதி அரேபிய குடிமக்கள் மற்றும் சவுதி அரேபிய பட்டத்து இளவரசருக்கு மிகவும் நெருக்கமான ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் அகமது ஹாசன் முகமது அசிரி மீதும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அமெரிக்காவின் ஜோ பைடன் அரசு உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்