நேபாள நாடாளுமன்ற கலைப்பு சட்டவிரோதம் - நேபாள உச்சநீதிமன்றம்

நேபாள நாடாளுமன்றத்தின் கீழவையை கலைக்க அப்போதைய பிரதமர் கே.பி.சர்மா ஒலி அளித்த பரிந்துரையை ரத்து செய்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேபாள நாடாளுமன்ற கலைப்பு சட்டவிரோதம் - நேபாள உச்சநீதிமன்றம்
x
நேபாள நாடாளுமன்றத்தின் கீழவையை கலைக்க அப்போதைய பிரதமர் கே.பி.சர்மா ஒலி அளித்த பரிந்துரையை ரத்து செய்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தின் கீழவையை கலைக்க, குடியரசுத் தலைவருக்கு நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி பரிந்துரை அளித்தார். இதனையேற்று குடியரசுத் தலைவர் கீழ் அவையை கலைத்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தலைமை ​நீதிபதி தலைமையிலான13 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு ஒலியின் பரிந்துரையை ரத்து செய்ததுடன், நாடாளுமன்ற கீழ் அவையை 13 நாட்களுக்குள் கூட்ட உத்தரவிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்