நிலவில் கோல்ஃப் - 50 ஆண்டுக்கு பின் கிடைத்த பந்து

1971ஆம் ஆண்டில், நிலவில் அடிக்கப்பட்ட கோல்ஃப் பந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.
நிலவில் கோல்ஃப் - 50 ஆண்டுக்கு பின் கிடைத்த பந்து
x
1971ஆம் ஆண்டில், நிலவில் அடிக்கப்பட்ட கோல்ஃப் பந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

"சந்திரனில் நின்று முதன் முதலில் பூமியைத் திரும்பிப் பார்த்த போது நான் அழுதேன்" என்று கூறியவர், ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி வீரர் ஆலன் ஷெப்பர்ட்.

 1971ஆம் ஆண்டு, அப்பல்லோ 14-இல் பயணப்பட்ட, ஆலன் ஷெப்பர்ட் மற்றும் அவரது குழுவினர்,  பிப்ரவரி 5ஆம் தேதி சந்திரனில் தரை இறங்கினர். அந்த சமயத்தில், ​​ஷெப்பர்ட் ஒரு தற்காலிக கோல்ஃப் கிளப்பை கொண்டு வந்து,  இரு முறை கோல்ப் பந்துகளை அடித்து, சந்திரனில் கோல்ஃப் விளையாடிய முதல் விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெற்றார்...

அவர் அப்போது அடித்த அந்த இரண்டு கோல்ஃப் பந்துகளும், ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது கண்டறியப்பட்டுள்ளன...

அப்பல்லோ 14 மிஷனின் போது, ஆலன் ஷெப்பர்ட், தான் அடித்த 2 பந்துகளில், ஒன்று ஒரு பள்ளத்தில் விழுந்ததாகவும், மற்றொரு பந்து பல மைல்களுக்கு அப்பால் விழுந்ததாகவும், அவர் கூறினார்...

ஆனால், புகைப்பட நிபுணர் ஆண்டி சாண்டர்ஸ் அவர்களால் புத்துருவாக்கம் செய்யப்பட்ட புகைப்படங்கள் வாயிலாக, அந்த கோல்ஃப் பந்துகள், ஆரம்பப் புள்ளியில் இருந்து, சில அடி தூரத்தில் மட்டுமே விழுந்திருப்பது தெரிய வந்துள்ளது.  

ஆண்டி சாண்டர்ஸ் அவர்கள் தனது கடின முயற்சியால், உயர் தெளிவுத்திறன் கொண்ட  நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, பழைய புகைப்படங்களை ஸ்கேன் செய்து பார்த்ததில், முதல் பந்து,  ஷெப்பர்டின் 'டீயிங் ஆஃப்' புள்ளியில் இருந்து, 72 அடி தொலைவிலும், இரண்டாவது பந்து, 120 அடி தூரத்திற்கும் மட்டுமே சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.  

ஷெப்பர்ட் நினைத்ததைப்போல் இரண்டாவது பந்து பல மைல் தூரத்திற்கெல்லாம் செல்லவில்லை என்பது 50 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்பட்டுள்ளது...

சந்திரனில் கோல்ஃப் விளையாடியதே மிகப்பெரிய சாதனை என்று தெரிவித்த சாண்டர்ஸ், அதுவும், உடல் முழுவதும் மிக கடினமான பாதுகாப்புக் கவச உடையோடு, தடிமனான கையுறைகளோடு, மிகவும் குறைவான ஈர்ப்பு விசை கொண்ட நிலவில், கோல்ஃப் பந்தை அடிப்பது என்பது அசாத்தியமான விஷயம் என்று கூறி ஷெப்பர்டை வெகுவாகப் பாராட்டினார். 

 அப்பலோ 14ல் கமாண்டரான ஆலன் ஷெப்பர்டு, நிலாவில் கோல்ஃப் விளையாடியதால், "நிலவில் விளையாடிய மனிதர்" என்று மக்களால் அழைக்கப்படுகிறார்

Next Story

மேலும் செய்திகள்