மனைவி... மறுபிறவி...நெகிழ்ச்சி... இறந்த மனைவியுடன் நடனமாடிய கணவர்
பதிவு : பிப்ரவரி 03, 2021, 03:56 PM
தென் கொரியாவில் இறந்துபோன மனைவியுடன் உற்சாகமாக நடனமாடியுள்ளார் கணவர். எப்படி நிகழ்ந்தது இந்த அற்புதம்.
தென் கொரியாவில் இறந்துபோன மனைவியுடன் உற்சாகமாக நடனமாடியுள்ளார் கணவர். எப்படி நிகழ்ந்தது இந்த அற்புதம். விவரிக்கிறது இந்த காட்சி தொகுப்பு.

கற்பனையில் வாழ நினைப்பதை, நிஜ உலகில் நிகழ்த்தி காட்டும் ஒரு அற்புதம் இது...

சென்ற ஆண்டு தென்கொரியாவில், இறந்து சில மாதங்கள் ஆன குழந்தையை, நீண்ட நாட்களுக்கு பிறகு நேரில் கண்ட நெகிழ்ச்சியில், ஒரு தாய் கண்ணீருடன் உரையாடிய காட்சிகள் உலக மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது. 

இந்த அற்புதத்தை நிகழ்த்தி காட்டியது  VIRTUAL REALITY-தான். 

இந்த தாயை மகிழ வைத்த அதே குழு தான், தற்போது மீண்டும் ஒரு நம்பமுடியாத அற்புதத்தை உலகிற்கு நிகழ்த்தி காட்டி இருக்கிறது.

Meeting You என்ற பெயரில், இறந்த மகளிடம் தாய் உரையாடியதை உலகிற்கு கூறியவர்கள், இந்த முறை மனைவியை இழந்து வாடிய கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து மகிழ்ச்சியில் திகைக்க வைத்திருக்கின்றனர். 

நடை, உடை பாவனைகளை கணினியில் பதிவேற்றி, 6 மாத உழைப்பிற்கு பிறகு, அந்த பெண்ணை நிஜ உலகின் அதிசய படைப்பாக கணவருக்கு அறிமுகப்படுத்தியது அந்த குழு.

எல்லாம் ரெடி, இதுதான் நேரம் என அறிந்து, கணவரிடம் VIRTUAL REALITY-க்கான கவசத்தை கொடுத்து, அந்த அழகிய தருணத்தை அனுபவிக்குமாறு கூறினர். மனைவியை பார்த்த மகிழ்ச்சியில் கண்ணீருடன் பாசம் பரிமாற, பின்னர் அவருடன் இணைந்து காதலுடன் நடனமாடிய காட்சிகள், பார்ப்போரை நெகிழ வைத்தது.

மனைவியை பார்த்து கணவர் மகிழ்ச்சியில் மூழ்க, தந்தையின் செயல்பாடுகளை வியப்புடன் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர் இவர்களது குழந்தைகள்.

மறைந்தவர்களுடன் உரையாடும் வாய்ப்பு, எங்களுக்கும் கிடைக்காதா என காண்போரை ஏங்க வைத்திருக்கிறது, இந்த தென்கொரிய குழு.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

356 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

115 views

அப்பவே அப்படி... சின்னங்கள் பற்றி சிறியதாக ஒரு வரலாறு

தேர்தல் நெருங்கும் நிலையில், தனி சின்னம், ஒரே சின்னம் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்கலாம்.

84 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

60 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

31 views

பிற செய்திகள்

டெக்சாஸ் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு - கடும் குளிருக்கு 21 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கடும் குளிருக்கு 21 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

119 views

செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வில் நாசா தீவிரம் - ரோபோட்டிக் ரோவர் தரையிறங்க ஆயத்தம்

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய ரோபோட்டிக் ரோவர் நாளை மதியம் செவ்வாயில் தரையிறங்குகிறது.

45 views

கடலில் ததும்பி வழியும் நுரை- வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

அயர்லாந்தின் பன்மஹோனில், கடலில், நுரை ததும்பி வழிந்து காற்றில் மிதந்தது.

112 views

ஜி ஜின் பிங்குடன் ஜோ பைடன் ஆலோசனை...அமெரிக்க மக்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை

சீன அதிபர் ஜீ ஜின் பிங்கை தொடர்புக்கொண்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோசனை மேற்கொண்டார்.

15 views

ஆங் சான் சூகியின் தடுப்புக்காவல் நீட்டிப்பு - ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் தீவிரம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடையும் நிலையில் 2 ஆவது நாளாக இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

24 views

மீண்டும் அச்சுறுத்தும் பனிப்புயல் : மின்சார வயர்களில் படர்ந்த பனி... மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

அமெரிக்காவை மீண்டும் பனிப்புயல் தாக்கி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

106 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.