நாய் வடிவத்தில் ரோபோ வடிவமைப்பு - துரிதமாக செயல்பட்டு அசத்தல்

அமெரிக்காவை சேர்ந்த போஸ்டன் டைனமிக்ஸ் என்ற ரோபோ தயாரிப்பு நிறுவனம் நாய் வடிவத்தில் ரோபோ ஒன்றை வடிவமைத்து உள்ளது.
நாய் வடிவத்தில் ரோபோ வடிவமைப்பு - துரிதமாக செயல்பட்டு அசத்தல்
x
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள பொஹாசிசி பல்கலைக் கழக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். பாலின சமத்துவம் தொடர்பாக அந்நாட்டு அமைச்சர் ஒருவர், சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து இருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். முன்னதாக பல்கலைக் கழக தலைவர் நியமனத்தை கண்டித்து மாணவர்கள், போராடி வந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவை சேர்ந்த போஸ்டன் டைனமிக்ஸ் என்ற ரோபோ தயாரிப்பு நிறுவனம் நாய் வடிவத்தில் ரோபோ ஒன்றை வடிவமைத்து உள்ளது. புதுப்பிக்கப்பட்ட தோற்றத்தில், விற்பனைக்கு வந்துள்ள இந்த ரோபோ, பல்வேறு பணிகளை துரிதமாக செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. தன்னிச்சையாக ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் இந்த ரோபோ, தரவுகளை சேமிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் வட கிழக்கு மாகாணங்களை பனிப்புயல் தாக்கியதால், ஏராளமான பகுதிகள் பனி படர்ந்து காட்சி அளிக்கின்றன. நியூயார்க் உள்ளிட்ட மாகாணங்களில் 2 அடி ஆழத்துக்கு, பனியால் சாலைகள் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில், அங்குள்ள பூங்காவுக்கு வந்த மக்கள், பனியில் சறுக்கி விளையாடி, மகிழ்ச்சி அடைந்தனர். பனியில் சறுக்கி விளையாடுவது, தங்களது குழந்தைப் பருவத்தை நினைவுபடுத்துவதாக, உற்சாகம் பொங்க சிலர் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்