மியான்மரில் பதற்றம் - ராணுவம் ஆட்சியை கவிழ்க்க முயற்சி

மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில், ஆளும் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஓராண்டுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மியான்மரில் பதற்றம் - ராணுவம் ஆட்சியை கவிழ்க்க முயற்சி
x
மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில், ஆளும் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஓராண்டுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மியான்மரில் நவம்பரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி ஆட்சிக்கு மீண்டும் வந்தது. ராணுவத்தின் ஆதரவுப்பெற்ற கட்சிகள் எல்லாம் தோல்வியை தழுவின. இதனையடுத்து தேர்தலில் மோசடி நடைபெற்று இருப்பதாக ராணுவம் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு காணப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலையில் ஆங் சான் சூகி மற்றும் அவருடைய கட்சி தலைவர்கள் பலர் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனநாயக ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ராணுவம் ஈடுபட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதற்கிடையே அந்நாட்டு அரசு தொலைக்காட்சி மற்றும் வானொலி தரப்பில் தொலை தொடர்பு சேவை பிரச்சினை காரணமாக ஒளிபரப்பு சேவை தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓராண்டுக்கு அங்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்