உயிருடன் இருப்பவர்களுக்கு இறுதிச்சடங்கு - மறுபிறவி எடுப்பதாக நம்பும் மக்கள்

அதிர்ஷ்டம் பிறக்கும் என தாய்லாந்தில் நடத்தப்படும் வினோத இறுதிச்சடங்கு வழிபாடு குறித்த சுவாரஸ்ய தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
உயிருடன் இருப்பவர்களுக்கு இறுதிச்சடங்கு - மறுபிறவி எடுப்பதாக நம்பும் மக்கள்
x
அதிர்ஷ்டம் பிறக்கும் என தாய்லாந்தில் நடத்தப்படும் வினோத இறுதிச்சடங்கு வழிபாடு குறித்த சுவாரஸ்ய தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ளது தஹியான் ஆலயம்.

உயர்ந்த கோபுரத்துடன் தாய்லாந்து பாரம்பரியம் தாங்கி நிற்கும் இந்த ஆலயம் உலக அளவில் அறியப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் அதிர்ஷ்டம் வேண்டி  சமீப காலமாக நூற்றுக்கணக்கான மக்கள் இங்கே படையெடுக்கிறார்கள். இதற்கு காரணம் அங்கு நடத்தப்படும் வினோத இறுதிச்சடங்கு வழிபாடாகும்.

இந்த வழிபாட்டை செய்தால் வாழ்வில் அதிர்ஷ்டம் பிறக்கும் என்பது அவர்களுடைய நம்பிக்கையாக  இருக்கிறது. வழிபாட்டில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் முதலில் கோவிலில் முன்பதிவு செய்கிறார்கள்.

பின்னர் கோவிலில் நடைபெறும் சடங்கில் கலந்துக்கொள்கிறார்கள். அப்போது தங்கள் கையில் ஒரு பூங்கொத்தை வைத்துக்கொண்ட துறவியொருவர் கூறும் மந்திரங்களை பின் தொடர்கிறார்கள்

அதனை தொடர்ந்து அவர்கள் சவப்பெட்டியில் அமைதியாக படுக்க வைக்கப்படுகிறார்கள்
 
துறவி மந்திரங்களை தொடர்ந்து சொல்லும் நிலையில், சிறிது நேரம் கழித்தும் சவப்பெட்டியின் மேலிருக்கும் துணி நீக்கப்படுகிறது
 
இந்த இறுதிச்சடங்கு வழிபாட்டுக்கு மக்களிடம் இந்திய ரூபாய் மதிப்பில் 270 ரூபாய் வரையில் வசூலிக்கப்படுகிறது

கொரோனா காலத்தில் இந்த வழிப்பாட்டில் கலந்துக் கொள்வோர் எண்ணிக்கை அதிகரிப்பதாக கூறப்படுகிறது 

மரணம் மற்றும் மறுபிறப்பை உணரும் வகையில் இந்த வழிபாடு நடத்தப்படுவதாக இதில் கலந்துக் கொள்பவர்கள் தெரிவிக்கிறார்கள்
 
கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் குறைந்ததால் இந்த வழிப்பாட்டில் கலந்துக்கொண்டதாகவும், தற்போது மீண்டும் பிறப்பெடுத்ததாக உணர்வதாகவும், புதிய மனிதராக உணர்வதாகவும் வழிபாட்டில் பங்கேற்றவர்கள் கூறுகின்றனர்.

இந்த வழிபாட்டில் கலந்துக்கொள்ளும் பலரும், சவப்பெட்டியில் படுக்கும் போது துன்பங்கள் நீங்குகிறது, அதிலிருந்து எழும்போது வாழ்க்கையில் அதிர்ஷ்டம் சேர்ந்துக் கொள்கின்றன எனக் கூறுகிறார்கள்.

அதிர்ஷ்டம் வரும் என்ற நம்பிக்கையால், தொடர்ந்து பலரும் சவப்பெட்டியில் படுத்து பிரார்த்தனை செய்ய முன்பதிவு செய்து வருகிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்