இந்தியா, சீனா இடையிலான 9 - வது சுற்று பேச்சு நிறைவு; 15 மணி நேரத்திற்கும் மேல் நீடித்த பேச்சு வார்த்தை

சர்வதேச எல்லைக்கோட்டு அருகே உள்ள துருப்புக்களை உடனடியாக சீனா விலக்கிக் கொள்ள வேண்டும் என இந்தியா வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா, சீனா இடையிலான 9 - வது சுற்று பேச்சு நிறைவு; 15 மணி நேரத்திற்கும் மேல் நீடித்த பேச்சு வார்த்தை
x
சர்வதேச எல்லைக்கோட்டு அருகே உள்ள துருப்புக்களை உடனடியாக சீனா விலக்கிக் கொள்ள வேண்டும் என இந்தியா வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்தாண்டு இந்திய எல்லைக்குள் சீனா அத்துமீறியதை தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையிலான உறவு, முன்எப்போதும் இல்லாத வகையில் மோசமான நிலைக்கு சென்றது. 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது இருநாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் சீர்கேடு அடையச் செய்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சுமார் 7 கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்த நிலையில், இருநாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களும் செப்டம்பர் 10 ஆம் தேதி மாஸ்கோவில் சந்தித்து பேச்சு நடத்தினர். இதனைத் தொடர்ந்து நடந்த 8 ஆம் சுற்று பேச்சிலும் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், 2 மாதங்களுக்கு பின்னர் இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் பங்கேற்ற கார்ப்ஸ் கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நேற்று காலை சீன பகுதியான மால்டோவில் தொடங்கியது. சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த பேச்சு இன்று அதிகாலை 2.30 மணிக்கு நிறைவடைந்துள்ளது. இந்த பேச்சில், சர்வதேச எல்லைக் கோட்டு அருகே நிறுத்தியுள்ள தனது துருப்புக்களை உடனடியாக சீனா விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய பகுதிகளில் துருப்புக்கள் விலக்கிக் கொள்ளப்பட்டதை ஆய்வு செய்ய விரும்புவதாகவும் இந்திய தரப்பில் முன்வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது எல்லையில் இருநாடுகளும் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீரர்களை களம் இறக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்